News August 6, 2025

FLASH: இந்திய பொருள்களுக்கு 50% வரி விதித்த டிரம்ப்

image

அமெரிக்காவில் இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்ய கூடுதலாக 25% வரி விதித்து டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால், மொத்தமாக 50% வரி செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ஆயில் பொருள்கள் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் கூடுதல் வரி விதிக்க நேரிடும் என டிரம்ப் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 6, 2025

9-12 வகுப்பு மாணவர்களுக்கு E-Mail ID உருவாக்க அறிவுறுத்தல்

image

9 – 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இ-மெயில் ஐடி உருவாக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர் கல்விக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், ஆன்லைனில் தயாராகவும் ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக இதனை செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 6, 2025

கட்டணமின்றி அறுபடை வீடுகளுக்கு பயணம்: அமைச்சர்

image

முருகனின் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய 2000 மூத்த குடிமக்களை அழைத்து செல்லயிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இப்பயணம் மேற்கொள்பவர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60-70 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட சில விதிகள் உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை செப்.15-க்குள் சமர்ப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

அதிகரிக்கும் ‘Group’ மோசடிகள்.. Whatsapp தந்த புது அப்டேட்!

image

டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்துவிட்டன. தற்போது, தானாக ஒரு Whatsapp குரூப்பில் இணைக்கப்பட்டு அதன் மூலம் போன் ஹேக் செய்யப்படுகிறது. இம்மாதிரியான குரூப் மோசடிகளில் இருந்து பாதுகாக்க, Whatsapp புது அப்டேட்டை தந்துள்ளது. தெரியாத நபரால், தெரியாத குரூப்பில் இணைக்கப்பட்டால், ஒரு ‘Safety Overview’ மெசேஜ் வரும். அதில், குரூப்பின் அனைத்து தகவலும் இருக்கும். பயனர் அதை சரிபார்த்து, குரூப் பற்றி அறியலாம்.

News August 6, 2025

கேரள மக்களுக்கு வயநாடு போல் மீண்டும் அதிர்ச்சி

image

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்புக்கு பிறகு கேரளாவை சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் மாயமானது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை 30-ம் தேதி நிகழ்ந்த வயநாடு நிலச்சரிவின் சோகத்திலிருந்தே 298 பேரின் குடும்பத்தினர் மீளாத நிலையில், தற்போது 28 பேர் மீண்டும் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. 28 பேரும் மீண்டு வர இறைவனை வேண்டுவோம்.

News August 6, 2025

வாஷிங்டன் சுந்தருக்கு பதக்கம்: கிரிக்கெட் ரவுண்ட் அப்

image

*வாஷிங்டன் சுந்தருக்கு இத்தொடரின் ‘IMPACT PLAYER’ பதக்கம் பிசிசிஐ சார்பில் டிரெஸ்ஸிங் ரூமில் வழங்கப்பட்டது. *5-வது டெஸ்டின் கடைசி நாளில் இந்தியாவை கண்டு இங்கி., பயந்துவிட்டதாக மைக்கேல் வாகன் விமர்சனம்.* 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய இந்தியா தகுதியான அணி என நாசர் ஹுசேன் புகழாரம்.* The Hundred தொடரின் முதல் போட்டியில் லண்டன் அணியை ஓவல் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

News August 6, 2025

EPS-க்கு சவால் விட்ட பெ.சண்முகம்

image

ED, IT ரெய்டுக்கு பயந்து BJP-வுடன் EPS கூட்டு சேர்ந்துள்ளதாக பெ.சண்முகம் சாடியுள்ளார். தேர்தலில் சீட்டுக்காக மக்களின் பிரச்னைகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் திமுகவுக்கு எதிராக போராட தயங்குவதாக EPS விமர்சித்திருந்தார். இதனிடையே, நீங்கள் மக்களுக்கான பிரச்னையில் எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளீர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? என EPS-க்கு சண்முகம் சவால் விடுத்துள்ளார்.

News August 6, 2025

வார விடுமுறை: 1,040 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வார இறுதி நாள்களை முன்னிட்டு ஆக.8, 9 மற்றும் 10-ம் தேதிகளில் சிறப்பு பஸ்களை <>TNSTC<<>> அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு 690 பஸ்களும், நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 110 பஸ்களும் இயக்கப்படவுள்ளன. அதேபோல், மாதவரத்திலிருந்து 40, கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதலாக 250 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

News August 6, 2025

30 வயதை தாண்டிய ஆண்களுக்கு…

image

ஆண்களுக்கு 30- 40 வயதில், ஆண் தன்மைக்கு காரணமாக டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைய தொடங்கும். இதனால் உடல்வலு குறையத் தொடங்கும், வழுக்கை ஏற்படும். குறிப்பாக உடலுறவு செயல்திறனும் குறைய தொடங்கும். இந்நிலையில், தசைகளில் ரத்தவோட்டம் அதிகரிப்பதால், டெஸ்டோஸ்டீரான் சுரப்பு அதிகரிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு எடை தூக்குதல் உள்ளிட்ட சில வழிமுறைகளை பின்பற்ற டாக்டர்கள் ஆலோசனை தருகின்றனர்.

News August 6, 2025

பாலிவுட்டுக்கு செல்லும் சாம் சி.எஸ்

image

விக்ரம் வேதா, டிமாண்டி காலனி-2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் சாம் C.S. இவர் தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது பாலிவுட்டில் ஒரு படத்துக்கு அவர் இசையமைக்க உள்ளாராம். இத்தகவலை அவர் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

error: Content is protected !!