News August 22, 2025

நெல்லைக்கு இன்று வருகிறார் அமித்ஷா

image

நெல்லை மாவட்டத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். முன்னதாக கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பிற்பகலில் நெல்லைக்கு வருகிறார். மாலை சுமார் 3.20 மணியளவில் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் நிர்வாகிகளிடம் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

ஆகஸ்ட் 22: வரலாற்றில் இன்று

image

*1639 – நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) பிரிட்டிஷ் அமைத்தது.
*1894 – SA-வில் இந்திய வணிகர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடால் இந்தியக் காங்கிரஸ் என்ற அமைப்பை மகாத்மா காந்தி துவக்கினார்.
*1955 – நடிகர் சிரஞ்சீவியின் பிறந்ததினம்.
*1958 – நடிகர் லிவிங்ஸ்டன் பிறந்ததினம்.
*1932 – தொலைக்காட்சி சேவை துவங்க BBC சோதித்தது.

News August 22, 2025

இணையத்தில் வைரலாகும் ஜான்வி கபூர் போட்டோஸ்

image

80-களில் தமிழில் ஜாம்பவான் நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியிலும், தெலுங்கிலும் கவனிக்கதக்க நடிகையாக வளர்ந்து வருகிறார். விரைவில் அவர் தமிழ் சினிமாவிலும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் அண்மையில் எடுத்த போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை மேலே கொடுத்துள்ளோம் Swipe செய்து பார்க்கவும்.

News August 22, 2025

டெல்லியில் தெருநாய்கள் நிலை? SC-ல் இன்று முடிவு

image

டெல்லியில் தெருநாய்களை காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என SC அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் 3 நீதிபகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆக.,14-ம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

News August 22, 2025

கபில்தேவ் பொன்மொழிகள்

image

*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள்.
* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
* நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது.
* உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.

News August 22, 2025

அதிமுக – பாஜகவுடன் தவெக மறைமுக கூட்டணி: வன்னியரசு

image

அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக பார்ட்னராக விஜய் செயல்படுகிறார் என வன்னியரசு விமர்சித்துள்ளார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு வைக்கும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். அதை செய்யாமல் இபிஎஸ் முன்மொழிந்ததை வழிமொழிந்தனர் மூலம் அதிமுகவுடன் தவெக மறைமுக கூட்டணி வைத்திருப்பது அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

ஆவணி அமாவாசையான இன்று என்ன செய்யலாம்?

image

ஆவணி அமாவாசையான இன்று வழங்கப்படும் தானங்கள் நமக்கு மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும் நற்கதியையும், புண்ணியங்களையும் வழங்குமாம். ஆதலால் இன்றைய நாளில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களையோ அல்லது அன்னதானமாகவோ வழங்கலாம். கோயிலுக்கு நெய் நிரப்பிய விளக்குகள், எண்ணெய், வெல்லம், பருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகள் ஆகியவற்றை வழங்கினால் முன்னோர்களின் ஆசி கிட்டும் என நம்பப்படுகிறது.

News August 22, 2025

எல்லாராலும் MGR ஆக முடியாது: விஜய் பற்றி ஜெயக்குமார்

image

தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் எம்ஜிஆர் குறித்து விஜய் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய EX அமைச்சர் ஜெயக்குமார், இது ஒரு தேர்தல் யுக்தி என்றும், வாக்குகளை பெறுவதற்காக அண்ணா, எம்ஜிஆர் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவதாக விமர்சித்தார். எல்லோராலும் MGR, ஜெயலலிதா ஆகிவிட முடியாது எனக் கூறிய அவர், இரட்டை இலைக்கு வாக்களித்த கை, ஒரு காலத்திலும் வேறு கட்சிக்கு வாக்களிக்காது என்றார்.

News August 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 435 ▶குறள்: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். ▶ பொருள்: முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

News August 22, 2025

வரலாற்று சாதனைக்காக காத்திருக்கும் அர்ஷ்தீப்

image

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 63 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20களில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் உள்ளார். இச்சூழலில் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் படைப்பார்.

error: Content is protected !!