News July 11, 2025

95 வருட சாதனையை உடைப்பாரா கில்?

image

இந்திய டெஸ்ட் கேப்டன் கில் ENG-க்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில், 4 இன்னிங்ஸில் 585 ரன்களை விளாசி இருக்கிறார். அவர் இன்னும் 6 இன்னிங்ஸில் 390 ரன்களை அடித்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 95 வருட ரெக்கார்டை தகர்த்து விடுவார். 1930-ல் பிராட்மேன் ENG-க்கு எதிராக 974 ரன்களை அடித்திருந்ததே சாதனையாக இருக்கிறது. சாதிப்பாரா கில்?

News July 11, 2025

ஜூலை 14-ல் பூமி திரும்பும் ஆக்சியம் 4 குழு

image

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த ஜூன் 25-ம் தேதி ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அங்கு தங்களின் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு ஜூலை 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என்ற தகவல் இருந்தது. இந்நிலையில், ஜூலை 14-ல் இந்த ஆக்சியம் 4 குழு பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

News July 11, 2025

‘செல்லம்மா… செல்லம்மா…’

image

Checked ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்டில் சிம்பிளாக பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி இருக்கிறது. கோல்டன் ஆரோ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இளைஞர்களின் நெஞ்சில் அம்புவிட்டவர், தற்போது பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்து வருகிறார். அவரது போட்டோஸ் பார்த்து, ‘கட்டம் போட்ட சட்டையில் கண்ணழகு நெருப்பாக, ஜீன்ஸ் நடையில் என் நெஞ்சு பனியாக கசிகுற லாவகமா’ என நெட்டிசன்கள் கவிதை பாட தொடங்கிவிட்டனர்.

News July 11, 2025

75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: மோகன் பகவத்

image

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். PM மோடிக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், அடுத்தாண்டு அவரை ராஜினாமா செய்ய வைக்க RSS மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் களத்தில் பேச்சு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நாக்பூர் RSS அலுவலகத்திற்கு PM சென்றபோது இது தொடர்பாக பேசப்பட்டதாகவும் சொல்கின்றனர். மோகன் பகவத் கருத்து பற்றி உங்க கமெண்ட் என்ன?

News July 11, 2025

சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

3 ஆண்டு LLB சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலை 25-ம் தேதி மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 044-24641919 (அ) 24957414 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News July 11, 2025

‘நிபா’ வைரஸ் பரவல்.. பழங்களை கழுவி சாப்பிடுங்க

image

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்கள் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் தொற்று நோயாகும். குறிப்பாக பழ வகை வெளவால்கள், பன்றி போன்றவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT.

News July 11, 2025

கடன் வாங்காமல் சமாளிக்க… சிம்பிள் டிப்ஸ்!

image

அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்குவது என்ற காலம் மாறி, ஆடம்பரத்துக்காக தற்போது கடன் வாங்க தொடங்கி விட்டனர். ஆனால், இது பெரும் சிக்கல்களை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடன் வாங்காமல் இருக்க, இந்த சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க
✦ஒரு குறிப்பிட்ட தொகை கையிருப்பு வெச்சிக்கோங்க
✦திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு சின்ன சேமிப்பு வேண்டும்
✦பங்குச் சந்தை, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

News July 11, 2025

கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

image

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

News July 11, 2025

இறுதிக்கட்டத்தை நெருங்கும் USA உடனான வர்த்தக ஒப்பந்தம்

image

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்தியா – அமெரிக்காவுக்கான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவராக இவர் உள்ளார். மேலும் இந்தியா தரப்பில் இதுவரை 26 நாடுகளுடன் 14-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

News July 11, 2025

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

image

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை(ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன் அமெரிக்க தூதரகம் மூலம் பேசுவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!