News July 11, 2025

3 தீவிரவாதிகள் சிக்கியது எப்படி? டிஜிபி விளக்கம்

image

பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளை TN போலீசார் கைது செய்துள்ளனர். 58 பேரை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பில் தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி, சாதிக்கை TN ATS போலீசார் 30 ஆண்டாக தேடி வந்தனர். அவர்கள் ஆந்திரா, கர்நாடகாவில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து போலீசார் கைது செய்திருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்

image

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, 12 மணிநேரத்துக்கு பின் உயிரோடு எழுந்தால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவில், ஒரு பெண்ணுக்கு 7-வது மாதமே குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த ஹாஸ்பிடலில் குழந்தையை இரவு முழுவதும் ICU-வில் வைத்து கண்காணித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையை புதைக்க மாஸ்க்கை விலக்கிய போது, அசைவு தெரிந்தது. உடனே குழந்தையை வேறொரு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

News July 11, 2025

பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்

image

✪2 <<17028604>>நாள்கள் <<>>சுற்றுப்பயணம்… தமிழகம் வரும் PM மோடி
✪வைகோ <<17027986>>அல்ல <<>>’பொய்கோ’.. வைகைச்செல்வன் விளாசல்
✪75 <<17027716>>வயதில் <<>>ஓய்வு பெறணும்.. மோடியை லாக் பண்ணும் RSS
✪பஸ் <<17027908>>மீது <<>>துப்பாக்கி சூடு… பாகிஸ்தானில் 9 பேர் பலி
✪ODI <<17028373>>அணிக்கும் <<>>கேப்டனாகும் கில்… BCCI ஆலோசனை ✪கோலிவுட்டில் <<17028056>>ஜாதி <<>>இல்லையா.. கலையரசன் ஷாக்கிங் Statement

News July 11, 2025

ரஜினிகாந்த் ஒரு கூல் மேன்: ஸ்ருதிஹாசன்

image

தனது அப்பாவும் (கமல்), ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் 2 தூண்கள் என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். ‘கூலி’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பாசிட்டிவான எனர்ஜியை ரஜினி கொண்டுவருவார் என்றார். மேலும், அவர் மிகவும் புத்திக்கூர்மையுடையவர் என்றும், ஒரு கூலான மனிதர் என்றும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

இனி அவர் பல்டி பழனிசாமி: சேகர்பாபு தாக்கு

image

இனிமேல் EPS-ஐ ‘பல்டி பழனிசாமி’ என்று அழைக்கலாம் என சேகர்பாபு விமர்சித்துள்ளார். அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகள் குறித்த இபிஎஸ்-ன் பேச்சு சர்ச்சையானது. பின்னர், அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரியில் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது என்று EPS விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய சேகர்பாபு, அவர் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்டிருப்பதாக சாடியுள்ளார்.

News July 11, 2025

வாரத்திற்கு ஒரு கணவருடன் வாழும் பழங்குடியின பெண்கள்

image

வாரத்திற்கு (அ) மாதத்திற்கு ஒரு கணவருடன் வாழும் பழங்குடியின பெண்கள் வாழும் கிராமங்கள் இந்தியாவில் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், குஜராத், ராஜஸ்தான் மலைப்பகுதியில் வாழும் கராசியா(Garasia) பழங்குடி பெண்களுக்கு அந்த உரிமை உள்ளது. இந்த சமூகத்தில் பல பெண்கள் திருமணத்திற்கு முன்பே தாயாகிறார்கள். ஒரு சில பெண்கள் தங்களது விருப்பத்தின்பேரில் ஒரே கணவருடனும் வாழ்ந்து வருகின்றனராம்.

News July 11, 2025

திருப்பதியில் நீங்க இத பார்த்திருக்கவே மாட்டீங்க

image

அடிக்கடி திருப்பதி போனாலும், இதனை கவனித்திருக்க மாட்டோம். கோயில் பிரகாரத்தில் எங்குமே கடிகாரம் இருக்காது. வைகுண்டத்தில் நேர கட்டுப்பாடு இல்லை, அதையே திருப்பதியிலும் பின்பற்றுகின்றனர். நேரத்தை மறந்து பக்தர்கள் ஏழுமலையானிடம் தங்களை முழுமையாக ஒப்படைக்க இந்த நடைமுறை இருக்கிறது. அங்கு பூஜையும், அபிஷேகங்களும் கூட கணிப்புகளின் அடிப்படையில்தான் நடைபெறுகிறதாம். அடுத்த முறை திருப்பதிக்கு போன கவனியுங்க!

News July 11, 2025

ஜேசிபியை பார்க்கக்கூட 10,000 பேர் செல்வார்கள்: பஞ்சாப் CM

image

10,000 மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்குச் சென்றுவிட்டு, அங்கு உயர்ந்த விருதுகளை மோடி பெறுவதை பெருமையாகக் கூறுவதாக பஞ்சாப் CM பகவந்த் மான் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அதோடு, JCB-ஐ பார்க்கக்கூட 10,000 பேர் கூடுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். இந்நிலையில், பெயர் குறிப்பிடாமல், மாநில உயர் பொறுப்பாளரின் இந்த கருத்துகள் பொறுப்பற்றவை & வருந்தத்தக்கவை என வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News July 11, 2025

கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

image

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

News July 11, 2025

குன்றக்குடி அடிகளாருக்கு CM ஸ்டாலின் புகழாரம்

image

திராவிட இயக்கத்திற்கு துணை நின்ற மாண்பாளர் என்று குன்றக்குடி அடிகளாரை CM ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி SM-ல் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார் என்றும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என திராவிட இயக்கத்திற்கு துணை நின்ற மாண்பாளர் என்றும் புகழ்ந்துள்ளார்.

error: Content is protected !!