News August 23, 2025

உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம்: ஆ.ராசா

image

ராகுல் பிரதமராகவும், உதயநிதி முதல்வராகவும் ஆக முடியாது என அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ஆ.ராசா, ஜெய்ஷா எவ்வாறு BCCI செயலாளரானார் என கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வாக்களித்தால் யார் வேண்டுமென்றாலும் CM ஆகலாம் என்றும், இதே விமர்சனங்கள் கடந்த காலங்களில் ஸ்டாலினுக்கும் வந்ததாகவும், தற்போது உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

News August 23, 2025

விரைவில் இந்தியாவில் OpenAI அலுவலகம்

image

AI கருவிகளின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், OpenAI-யின் புதிய அலுவலகத்தை இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் திறக்கவுள்ளதாக, அதன் CEO சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் ChatGPT பயனர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீங்க AI யூஸ் பண்றீங்களா?

News August 23, 2025

சளி, இருமலை விரட்டும் தூதுவளை தேநீர்!

image

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இதை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.

News August 23, 2025

தவெக தொண்டர்கள் மரணம்.. சர்ச்சையில் சிக்கிய விஜய்

image

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் மூச்சு திணறியும், பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கியும், விபத்தில் சிக்கியும் 3 தவெக தொண்டர்கள் உயிரிழந்தனர். ஆனால், அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது பெரும் சர்ச்சையாகியுள்ளது. விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின்போதும் உயிரிழந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கூட அவர் அஞ்சலி செலுத்தவில்லை. இது அப்போதே சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

News August 23, 2025

நிவின் பாலிக்கு பதில் ஆதி? மார்ஷல் பட அப்டேட்

image

இயக்குநர் தமிழ் இயக்கிவரும் ‘மார்ஷல்’ படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், சத்யராஜ் உள்ளிட்டோரும் இதில் நடித்து வருகின்றனர். முன்னதாக நிவின் பாலி வில்லனாக நடிக்கவிருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அது நடக்காமல் போக, தற்போது நடிகர் ஆதி, வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்ட ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ளது. கார்த்தி – ஆதி காம்போ எப்படி இருக்கும்?

News August 23, 2025

ஆன்லைன் கேமிங் மசோதா: ஜனாதிபதி ஒப்புதல்

image

ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் கேம்களை தடை செய்யும் வகையில் ‘ஆன்லைன் கேமிங் மசோதா 2025’-யை நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்பின் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பபட்ட நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது. இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News August 23, 2025

HealthTips: காலை/இரவு உணவை தவிர்த்தால் எடை குறையுமா?

image

உடல் எடையை குறைக்க காலை/இரவு உணவை Skip செய்கிறீர்களா? இத்தவறை செய்தால் உங்களால் எப்போதும் எடையை குறைக்க முடியாது என டாக்டர்கள் சொல்கின்றனர். காலை/இரவு உணவை தவிர்ப்பது உங்களது பசியை தூண்டுமாம். இதனால் நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக உணவை உட்கொள்ள நேரிடும் என்கின்றனர். இதோடு, கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மெட்டபாலிசமும் குறையுமாம். நீங்க இந்த மாதிரியான Diet இருந்துருக்கீங்களா?

News August 23, 2025

திமுகவில் இருந்து விலக போகும் முக்கிய தலைவர்கள்?

image

முன்னாள் திமுக மூத்த தலைவர் KS ராதாகிருஷ்ணன் நேற்று பாஜகவில் இணைந்தார். அந்த வகையில் இன்னும் சிலர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திமுகவின் பெரிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக எல்.முருகன் கூறியிருந்தார். இந்நிலையில், கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் இணைப்பு விழா நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

News August 23, 2025

சுதர்சன் ரெட்டி நாளை சென்னை வருகை

image

INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை சென்னை வருகிறார். CM ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரவுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அனைவருக்கும் விருந்து அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, NDA வேட்பாளரான CP ராதாகிருஷ்ணனுக்கு தமிழர் என்ற முறையில் திமுக வாக்களிக்க வேண்டும் என அதிமுக, பாஜகவினர் கூறி வருகின்றனர்.

News August 23, 2025

SA T20 லீக்கில் பதிவு செய்த இந்திய வீரர்கள்

image

IPL போன்று தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் SA T20 லீக் வரும் டிச.26-ம் தேதி துவங்குகிறது. இதற்கான ஏலம் செப்.09-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி சார்பில் பியுஷ் சாவ்லா, சித்தார்த் கவுல், அங்கித் ராஜ்புட் உள்ளிட்ட 13 வீரர்கள் தங்களது பெயர்களை ஏலத்துக்காக கொடுத்துள்ளனர். BCCI விதிகளின்படி, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இவர்கள் ஓய்வுப்பெற்றதால் இத்தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

error: Content is protected !!