News August 23, 2025

கூட்டணி ஆட்சி குழப்பம்.. அதிமுக மா.செக்கள் கூட்டம்

image

ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற BJP பூத் கமிட்டி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது மீண்டும் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

News August 23, 2025

FIFA உலகக் கோப்பை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிரம்ப்

image

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை USA, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இப்போட்டிகள் 16 மைதானங்களில் நடைபெறுகின்றன. கடைசியாக 1994-ல் இத்தொடரை USA நடத்தியிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ உடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போட்டிகளைக் காண ரஷ்ய அதிபர் புடின் வரலாம் எனவும் தெரிவித்தார்.

News August 23, 2025

சென்னையில் மழை.. காலையிலேயே துயர மரணம்

image

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் இவர்தான். தற்போது அம்மாவை பறிகொடுத்த 2 குழந்தைகளும் யாரும் இல்லாமல் தவிக்கின்றனர்.

News August 23, 2025

ராகுல் காந்தி நடைபயணத்தில் CM ஸ்டாலின்

image

பாஜக, ECI-யை வைத்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு எதிராக ராகுல் காந்தி பிஹாரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.27-ல் இந்த பயணத்தில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்தவாறே அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 23, 2025

உங்களிடம் நகை இருந்தால்.. அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி

image

காது, கழுத்துல நகை போட்டு இருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடையாது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது நேற்று முதல் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உண்மையில் அமைச்சர் சொல்வதுபோல் அப்படி எதுவும் கிடையாது. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்.

News August 23, 2025

வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்!

image

கார் ஓட்டும்போது கைப்பேசியில் பேச ஆரம்பித்தால் கார் ஓட்டுவது விபரீதத்தில் முடியும் அல்லவா. அது போலதான் நமது வாழ்வும். சின்ன சின்ன விஷயங்களின் காரணமாக கவனம் சிதறினால், செய்ய நினைக்கும் வேலையில் முழு கவனம் கிடைக்காது. இந்த கவனச்சிதறலில் இருந்து தப்பிக்க, சிம்பிள் டிரிகஸ் ஒன்னு இருக்கு! வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்.. வேண்டாதது அதுவாக தானாகவே விலகிவிடும்.

News August 23, 2025

உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம்: ஆ.ராசா

image

ராகுல் பிரதமராகவும், உதயநிதி முதல்வராகவும் ஆக முடியாது என அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ஆ.ராசா, ஜெய்ஷா எவ்வாறு BCCI செயலாளரானார் என கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வாக்களித்தால் யார் வேண்டுமென்றாலும் CM ஆகலாம் என்றும், இதே விமர்சனங்கள் கடந்த காலங்களில் ஸ்டாலினுக்கும் வந்ததாகவும், தற்போது உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

News August 23, 2025

விரைவில் இந்தியாவில் OpenAI அலுவலகம்

image

AI கருவிகளின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், OpenAI-யின் புதிய அலுவலகத்தை இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் திறக்கவுள்ளதாக, அதன் CEO சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் ChatGPT பயனர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீங்க AI யூஸ் பண்றீங்களா?

News August 23, 2025

சளி, இருமலை விரட்டும் தூதுவளை தேநீர்!

image

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இதை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.

News August 23, 2025

தவெக தொண்டர்கள் மரணம்.. சர்ச்சையில் சிக்கிய விஜய்

image

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் மூச்சு திணறியும், பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கியும், விபத்தில் சிக்கியும் 3 தவெக தொண்டர்கள் உயிரிழந்தனர். ஆனால், அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது பெரும் சர்ச்சையாகியுள்ளது. விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின்போதும் உயிரிழந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கூட அவர் அஞ்சலி செலுத்தவில்லை. இது அப்போதே சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!