News July 10, 2025

தங்கம் விலை ஒரு வாரத்தில் ₹680 சரிவு

image

ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் ஆபரணத் <<17014491>>தங்கத்தின் விலை<<>> இன்று சற்று அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹680 குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த வியாழனில் (ஜூலை 3) 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹72,840 ஆக இருந்தது. அதேநேரத்தில், இன்றைய நிலவரப்படி, 1 சவரன் ₹72,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.

News July 10, 2025

இபிஎஸ்ஸை மக்கள் ஏற்க மாட்டார்கள்: ஸ்டாலின்

image

இபிஎஸ்ஸை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடந்த விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டை தமிழ்நாடு என கூறக்கூடாது எனும் கூட்டத்துடன் அதிமுகவை இபிஎஸ் சேர்த்து விட்டார் என்று விமர்சித்தார். அதிமுகவை மீட்க முடியாத இபிஎஸ், தற்போது தமிழகத்தை மீட்கப் போவதாக கூறி, ஒரு பயணத்தை தொடங்கி இருப்பதாகவும் ஸ்டாலின் சாடினார்.

News July 10, 2025

சுட்டெரிக்கும் வெயில்… ஒரே வாரத்தில் 2,300 பேர் பலி

image

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரே வாரத்தில் 2,300 பேர் பலியாகியுள்ளனர். ஜூலை 2 வரை 10 நாள்கள் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெயில் அடித்ததாகவும், குறிப்பாக ஸ்பெயினில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் பார்சிலோனா, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் 2,300 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

மதிமுகவில் மீண்டும் பிளவு?

image

மதிமுகவை வைகோ ஆரம்பித்தபோது அவருடன் இருந்த மூத்த தலைவர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன், கண்ணப்பன் உள்ளிட்டோர் மதிமுகவில் இருந்து ஏற்கெனவே வெளியேறி விட்டனர். இதனால் மதிமுகவின் செல்வாக்கு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே மோதல் நீருபூத்த நெருப்பாக உள்ளது. மல்லை சத்யா வெளியேறினால், மீண்டும் அக்கட்சியில் பிளவு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.

News July 10, 2025

நயன்தாராவுக்கு விவாகரத்தா? இன்ஸ்டா போட்டோவில் பதில்

image

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பிரிய வேண்டும் என யாருக்கு ஆசையோ தெரியவில்லை. சமீபத்தில் இந்த விவாகரத்து புரளி காட்டுத்தீயாக சோஷியல் மீடியா தொடங்கி தேசிய ஊடகங்கள் வரை பரவியது. இந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒன்றை போட்டோவில் நயன் பதில் அளித்துள்ளார். விக்கியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, Our reaction when we see loopy news about us என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

News July 10, 2025

ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு

image

கலாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி மாறன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல கோடி ரூபாய் சன் டிவி நிறுவன பங்குகளை மோசடி செய்ததாக கூறி, கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஸ்டாலினின் நெருங்கிய உறவினர்கள் இடையேயான இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் ஞாயிறு மாலை இருவரையும் அழைத்துப் பேசி சமரசம் செய்துள்ளார்.

News July 10, 2025

கல்லூரிகளில் ஒரே கால அட்டவணையில் தேர்வுகள்

image

தமிழகம் முழுவதும் உள்ள கலை & அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு நடத்திடும் வகையிலான கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். இதன்படி, ஆகஸ்ட்18-25 வரை முதல் Internal, செப்.23-30 வரை இரண்டாவது Internal நடத்தப்படும். அக்.16-27 வரை மாடல் எக்ஸாம் நடத்தப்பட்டு, அக்.31-ல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும். நடப்பு செமஸ்டரின் கடைசி வேலை நாள் அக்.28 ஆகும்.

News July 10, 2025

2,00,00,000 உறுப்பினர்கள்.. விஜய் போடும் மாஸ்டர் ப்ளான்!

image

2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் என அதிமுக சொல்கிறது. 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுக களப்பணியாற்றி வருகிறது. இந்த வரிசையில் விஜய்யும் இணைந்திருக்கிறார். ஜூலை 15-ல் உறுப்பினர் சேர்க்கைக்காக செயலியை அறிமுகம் செய்யும் அவர், <<17013074>>2 கோடி தொண்டர்களை<<>> இணைக்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வீட்டிற்கு ஒருவரை தவெகவில் இணைக்குமாறு அவர் குறிப்பிட்டிருந்தார். மெகா ப்ளான் விஜய்க்கு கை கொடுக்குமா?

News July 10, 2025

வார விடுமுறை… நாளை முதல் ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

image

வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை (ஜூலை 11) முதல் ஜூலை 13 வரை முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.

News July 10, 2025

அழகான சருமத்துக்கு டாப் 5 டிப்ஸ்…

image

அழகான சருமம் வேண்டும் என்ற யாருக்குதான் ஆசை இல்லை. ஆனால் தூசி, மாசு, உணவு & வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக சருமத்தில் பருக்கள், எண்ணெய் பசை, Black Heads போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய சரும பராமரிப்பு போதும். க்ரீம்கள், பேஸ்வாஷ் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால், மேலும் பிரச்னைகள் தான் எழும். உங்களுக்கும் நல்ல அழகான சருமம் வேண்டும் என்றால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.

error: Content is protected !!