News July 10, 2025

கோர விபத்து: ரயில்வே துறை முக்கிய உத்தரவு

image

கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், கேட் கீப்பர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல்பதிவுகளை கண்காணிக்க வேண்டும். அனைத்து ரெயில்வே கேட்கள், கேட் கீப்பர் அறைகளிலும் CCTV பொருத்த வேண்டும். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்டுகளில் இன்டர்லாக் சிஸ்டம் நிறுவப்படும் என 11 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

News July 10, 2025

முறைகேடு புகாரில் சிக்காத தலைவரும் ராஜினாமா!

image

மதுரை மாநகராட்சி 1வது மண்டல தலைவர் வாசுகியும் பதவியை ராஜினாமா செய்தார். <<16986453>>2, 3, 4, 5வது மண்டலங்களில்<<>> சொத்து வரியை குறைத்து காட்டி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனால் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய CM ஸ்டாலின் உத்தரவிட்டார். விசாரணையில் 1வது மண்டலத்தில் முறைகேடு நடக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், அவரும் ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 10, 2025

இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும்: தமிழிசை

image

வட்ட இலையுடன் தாமரை குளத்தில் மலரும், இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ‘மக்களைக் காப்போம்’ நிகழ்வு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், அதனைப் பார்த்து திமுக பயந்திருப்பதாகவும் கூறினார். நம் நாடு நன்றாக இருக்கிறது என்றால் மோடி தான் காரணம் என்றும், அவருக்காக கோவிலில் தான் பூஜை செய்வதாகவும் தெரிவித்தார்.

News July 10, 2025

பாரீஸ் நகரில் ரஷ்மிகா..!

image

Onitsuka Tiger என்பது ஒரு ஜப்பானிய ஷூ மற்றும் ஃபேஷன் பிராண்ட் ஆகும். இந்தியாவில் இந்த பிராண்ட்டின் விளம்பர தூதராக Pan India Actress ஆன ரஷ்மிகா மந்தனாவை கடந்த 2023-ம் ஆண்டே தேர்வு செய்தனர். தற்போது பாரீஸ் நகரில் இந்த பிராண்ட் சார்பாக நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பாரீஸ் சென்ற ரஷ்மிகா அந்த நகரில் அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News July 10, 2025

இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை: முத்தரசன்

image

சமீபத்தில் தனது சுற்றுப்பயணத்தின் போது பேசிய இபிஎஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருப்பதாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த சிபிஐ கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை என்றும், MGR-க்கு அரசியலில் நிரந்தர முகவரி பெற்று தந்ததே சிபிஐ தான் எனவும் அவர் கூறினார்.

News July 10, 2025

ஜூலை 10… வரலாற்றில் இன்று!

image

*1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி – வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர். *1949 – கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிறந்தநாள் *1973 – வங்கதேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் *2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

News July 10, 2025

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு இந்தியா அனுமதி..!

image

இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்கும் வகையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் அனுமதியை IN-SPACE மையம் வழங்கி உள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் 4408 முதல் தலைமுறை செயற்கை கோள்கள் இந்திய வான் எல்லை பகுதியில் செயல்பட தொடங்கும் என்றும், இதனால் 600 Gbps வேகத்தில் இணைய சேவை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

image

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.*இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

News July 10, 2025

கனிமொழி, உதயநிதி எங்கே? திருப்புவனத்தில் சீமான் கேள்வி

image

இளைஞர் அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாதகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய சீமான், காவல் மரணமடைந்த பெனிக்ஸ், ஜெயராஜ் வீட்டுக்கு சென்ற உதயநிதியும், கனிமொழியும் ஏன் அஜித்குமார் வீட்டுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்ததால் ஜெயராஜ் வீட்டுக்கு சென்றனர். இப்போது ஆளுங்கட்சி என்பதால் அஜித்குமார் வீட்டுக்கு செல்லவில்லை என விமர்சித்தார்.

News July 10, 2025

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!