News August 23, 2025

அனைவரும் தூய்மை பணிக்கு வர வேண்டும்: திருமாவளவன்

image

அனைத்து சமூகத்தினரும் தூய்மை பணி செய்ய முன்வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில், பணியின்போது மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், வரலட்சுமியின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும் சென்னையில் விரைவாக மின்சார கேபிள்களை புதை வடிவில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

News August 23, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு வழங்குவது உறுதி?

image

<<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000 <<>>வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

அமித் ஷாவுடன் CP ராதாகிருஷ்ணன் சந்திப்பு

image

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் CP ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, CP ராதாகிருஷ்ணன் அனுபவமிக்க தலைவர் எனவும் நிர்வாகத் திறன் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஆர் தேச நலனுக்காக அளப்பரிய தொண்டாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

News August 23, 2025

TVK மீது பாயும் விமர்சனங்கள்.. React செய்த விஜய்

image

தவெகவின் மதுரை மாநாட்டுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அளவு பேரன்பு காட்டும் நபர்களை உறவுகளாக பெற என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை என பதிவிட்ட அவர், தவெக மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம் எனவும் அல்லவையை புறந்தள்ளி புன்னகைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.

News August 23, 2025

குப்பையையும் விட்டுவைக்காத திமுக அரசு: EPS

image

நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதலிடம் தமிழ்நாடு என்ற சாதனையை CM ஸ்டாலின் படைத்துள்ளதாக EPS சாடியுள்ளார். திருவெறும்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வழங்கப்படுகிறது என்றார். மேலும், திமுக ஆட்சியில் DGP முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து நியமனங்களிலும் ஊழல் நடப்பதாகவும், குப்பைக்கு கூட வரி போட்டு மக்களின் பணம் சுரண்டப்படுகிறது எனவும் விமர்சித்தார்.

News August 23, 2025

ஜனநாயகனில் N.ஆனந்திற்கு முக்கிய ரோல்…

image

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சில பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். தவெக பொ.செ., N.ஆனந்த் போராட்டக்காரராக நடித்திருக்கிறாராம். விஜய்யின் முந்தைய படங்களை இயக்கிய அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் பத்திரிகை நிருபர்களாகவும், அனிருத் பாடல் ஒன்றில் தோன்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் கேமியோவுக்கு ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

News August 23, 2025

6 மாதம் இலவசம்.. ஏர்டெல் புதிய ஆஃபர்

image

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு APPLE MUSIC சேவையை இலவசமாக வழங்குகிறது. இந்த சேவை கிடைப்பதை உறுதி செய்வது எப்படி தெரியுமா? AIRTEL THANKS ஆப்பில் பயனர்களுக்கு அதற்கான NOTIFICATION வழங்கப்பட்டு வருகிறது. ஆப்பில் சென்று பயனர்கள் அதனை உறுதி செய்து கொள்ளலாம். இதன்மூலம், 6 மாதம் APPLE MUSIC சேவையை இலவசமாக பெறலாம். அதன்பிறகு மாதம் ₹119 கட்டணம் செலுத்த வேண்டும். SHARE IT.

News August 23, 2025

பதவிபறிப்பு மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

image

2014 முதல் கடந்த ஜூலை மாதம் வரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள், அமைச்சர்கள் மட்டுமே சொத்து குவிப்பு, ஊழல், மோசடி வழக்கில் கைதாகியுள்ளனர். இதில், TMC-5, AAP-4, ADMK-1, DMK-1, NCP-1 ஆகும். குறிப்பாக, TN-ல் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 21 நாள்களும், செந்தில் பாலாஜி 1 வருடம், 3 மாதங்களும் சிறையில் இருந்துள்ளனர். இந்த மசோதா எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் செயல் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

News August 23, 2025

DREAM11 போயாச்சு… DREAM MONEY வந்தாச்சு!

image

ஆன்லைன் கேம் சட்டம் வந்ததால், டிரீம்11 உள்பட பணம் வைத்து விளையாடும் அனைத்து கேம்களையும் டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டது. இந்நிலையில், ‘டிரீம் மணி’ என்ற ஆப் மூலம், தனிநபர் நிதிச் சேவை தொடங்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் டிஜிட்டல் கோல்ட் திட்டத்தில் இணைந்து ₹10 இருந்தாலே, நீங்கள் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம். அதேபோல், வங்கிக்கணக்கு இல்லாமலே ₹1,000 டெபாசிட்டுடன் FD தொடங்கலாம்.

News August 23, 2025

செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களுக்கு.. HAPPY NEWS

image

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆக.26-ல் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போதுவரை இந்த திட்டத்தில் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இனி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாப் CM பகவந்த் மானுக்கு அரசு சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!