India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனடா நாடாளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒக்வில்லே கிழக்கு தொகுதியில், ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சென்னையைச் சேர்ந்த அனிதா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய ஈழத்தமிழர்களும் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் கட்சியின் மார்க் கார்னி மீண்டும் பிரதமரானார்.
கீழ்காணும் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் காலியாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான உப்பு (பரிந்துரைக்கப்பட்ட அளவு 5 கி) சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, பதப்படுத்திகள் மிகவும் கேடுவிளைவிக்கும். குளிர்பானங்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகின்றன. அதீத சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை சிறுநீரகத்திற்கு எமனாக அமையும்.
டைம் மிஷின் கிடைத்தால் வரலாற்றில் யாரை சந்திப்பீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுக்கு 2 அறை கொடுப்பேன் எனவும், ‘சவா’ படம் பார்த்த பிறகு அவுரங்கசீப்பிற்கு 2 அறை கொடுக்க வேண்டும் என தோன்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் இதுபோன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியல் நிறைய இருப்பதாகவும் கூறினார்.
*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
மெட்டா CEO மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா ஆகியோரின் தொடக்கப்பள்ளி அடுத்த ஆண்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, கலிஃபோர்னியாவில் கடந்த 2016-ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இது மிகவும் கடினமான முடிவு எனவும், குழந்தைகளை மற்ற பள்ளிக்கு மாற்ற உதவி செய்வோம் எனவும் தம்பதி தெரிவித்துள்ளனர். இருப்பினும் மூடப்படுவதற்கான காரணத்தை அவர்கள் அறிவிக்கவில்லை.
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் SpaceX Felcon ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளார். Axiom 4 என்ற தனியார் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.
ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், பெங்களூருவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில், புதிய ஐபோன் 16 மாடல்களின் உற்பத்தி விரைவில் தொடங்கப்பட உள்ளன. சீன இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்த நிலையில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
*கடப்பதற்கு தடைகளும் தீர்ப்பதற்கு பிரச்னைகளும் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பற்று போய்விடும். *செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம். *உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒடுக்கிவிட முடியாது. *அச்சம் போன்று மிக மோசமாக ஆபத்து எதுவுமில்லை. *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை.
2026-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் கலப்பு தற்காப்பு கலைகள் (MMA) போட்டி முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட்டும் இந்த போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் செப். 19 முதல் அக்.4-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில், 15,000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்கும் முன்னாள் பாக். MP தபயா ராம், இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 6 பேருக்கு மட்டுமே இந்திய குடியுரிமை உள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. பாகிஸ்தானில் மத அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்னைகள் காரணமாக, அவர் கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா வந்தடைந்தார்.
Sorry, no posts matched your criteria.