India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அட்சய திருதியை குறைவில்லாத பெருக்கத்திற்கான நாளாகும். இந்நாளில் கடவுளை வணங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். விஷ்ணுவை வணங்குவது செல்வம், மகிழ்ச்சியை கொடுக்கும். லட்சுமியை வணங்குவது பணம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். விநாயகரை வணங்குவது தடைகளை நீக்கும். குபேரனை வணங்குவது செல்வத்தை கொடுக்கும். சிவனை வணங்குவது மன அமைதியை கொடுக்கும். SHARE IT.
அட்சய திருதியையொட்டி பல நகைக் கடைகள் தங்கம் வாங்கச் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விற்பனை குறைந்துள்ளது. இதனால், இன்று பவுனுக்கு குறிப்பிட்ட சதவீத விலை குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தை விற்பனை செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. அட்சய திருதியை நாளான இன்று(ஏப்.30) தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘மாமன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக, சூரி அறிவித்துள்ளார். ஹீரோவாக அறிமுகமானது முதல் இதுவரை சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது முதன்முறையாக குடும்ப உறவுகள் பற்றிய படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். அதேபோல், ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ‘விலங்கு’ வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
2026 தேர்தலில் கோவையில் விஜய் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான், முதல் பூத் கமிட்டி கருத்தரங்கை அங்கு நடத்தியதாம், அங்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பார்த்து முடிவெடுக்கலாம் என தவெக தரப்பு நினைத்ததாம். ஆனால், நினைத்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால், ஏறக்குறைய அத்தொகுதியை விஜய் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற தொகுதிகளிலும் பல்ஸ் பார்க்கப்படுமாம்.
கங்கை நதி விண்ணிலிருந்து பூமியை முதன்முதலில் தொட்ட நாள் அட்சய திருதியை என நம்பப்படுகிறது. இன்று தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதால், அவை மென்மேலும் வாங்கக்கூடிய யோகத்தை வழங்கும் என்பார்கள். தங்கம் வாங்குவதற்கு இது மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது தொடர்ச்சியான செல்வ வளர்ச்சியை உறுதி செய்கிறது. இன்று தங்கம் வாங்க சிறந்த நேரம் காலை 5:40 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
உள்ளாட்சி இடைத்தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் காலியாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை நடத்திய அவர், வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்த அறிவுறுத்தினார்.
34 ஆண்டுகால சர்வீஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கேம்கா இன்று ஓய்வு பெறுகிறார். நேர்மைக்கு பெயர் போன இவர், இதுவரை 57 முறை பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேரா தொடர்புடைய நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய அளவில் பிரபலமானார். ஊழலை வேரோடு ஒழிப்பதே தனது லட்சியம் என கூறி வந்தவர், ஹரியானா போக்குவரத்து துறை கூடுதல் செயலாளராக இன்று ஓய்வு பெறுகிறார்.
ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப், பிளேஆஃப் செல்ல முயற்சிக்கும். எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். ஏனெனில் அந்த சுப தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில், இன்று அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் கொழிக்கும். தங்கம் வாங்க இயலாதவர்கள் வெள்ளி, பித்தளை உள்ளிட்ட மற்ற உலோகங்களை வாங்கலாம்.
NLC தொழிற்சங்க தேர்தல் முடிவு அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. மொத்தமுள்ள 6,800 வாக்குகளில் DMKவின் தொமுச 2,507, ADMKவின் அதொமுச 1,389 வாக்குகள் பெற்றன. சிங்கிள் மெஜாரிட்டிக்கான 50% வாக்குகளை (3,183) DMK பெறாததால் பேச்சுவார்த்தைக்கு தகுதியான அங்கீகரிக்கப்பட்ட குழுவுக்கு அதிமுகவும் தேர்வாகியுள்ளது. சாதாரண தொழிற்சங்க தேர்தல் என்றாலும், ADMKவின் வெற்றியால் DMK தலைமை கடும் அதிர்ச்சியில் உள்ளதாம்.
Sorry, no posts matched your criteria.