News July 9, 2025

பாஸ்வோர்டுகளை AutoFill செய்கிறீர்களா..?

image

போனில் பேஸ்புக், X, இன்ஸ்டா போன்றவற்றில் உள்நுழைய பாஸ்வேர்டை AutoFill செய்து வைச்சிருக்கீங்களா? ஆமாம் என்றால், பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். இப்படி செய்வதால், போனின் OS பாஸ்வேர்ட் மேனேஜ்மேண்டின் குறைவதாக IIT ஹைதராபாத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக சைபர் கிரிமினல் தாக்குதல்களின் வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இனி உங்களின் பாஸ்வேர்ட் டைப் பண்ண பழகிக்கோங்க.

News July 9, 2025

BREAKING: நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு!

image

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகை அருணா வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தி வருவதாகவும், நடிகை அருணாவின் கணவர் குப்தாவின் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அருணா, இயக்குநர் பாரதிராஜாவின் ’கல்லுக்குள் ஈரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

News July 9, 2025

கோயில் பணத்தில் கல்லூரிகள்? இபிஎஸ் பேச்சுக்கு விளக்கம்

image

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார். படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உயர்கல்வித்துறையில் நிதி இல்லையா? அறநிலையத்துறையில் இருந்து தான் கட்ட வேண்டுமா என்றே இபிஎஸ் பேசியதாக ADMK IT Wing விளக்கமளித்துள்ளது.

News July 9, 2025

புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

image

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

News July 9, 2025

CM ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்

image

2 நாள்கள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார் CM ஸ்டாலின். அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் ஒரு பகுதியாக இப்பயணத்தை மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் கலந்துகொள்ளும் CM, மாலை திமுக நிர்வாகிகளைச் சந்தித்தபின் ரோடு ஷோ நடத்துகிறார்.

News July 9, 2025

கில்லுக்கு 10/10 மார்க்: ரவி சாஸ்திரி!

image

ENG-க்கு எதிராக 2-வது டெஸ்டில் பேட்டிங்கிலும் கலக்கிய இந்திய கேப்டன் கில்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரின் கேப்டன்ஷிப்புக்கு 10/10 மார்க் வழங்குவேன் என Ex. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஒரு இந்திய கேப்டனின் பெஸ்ட் இது எனக் குறிப்பிட்ட அவர், ஆகாஷ் போன்ற ஒரு பவுலரை கரெக்ட்டாக பயன்படுத்தியதற்கு கில்லை பாராட்டியாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

News July 9, 2025

B.Ed. சேர்க்கை விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

image

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed. படிப்பிற்கான விண்ணப்பம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18-ல் தரவரிசை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 21-25 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 28-ல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு, முதலாமாண்டு வகுப்புகள் ஆக.6-ல் தொடங்கவுள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News July 9, 2025

தமிழகத்தில் இன்று பஸ், ஆட்டோ ஓடுகிறதா? புது அப்டேட்

image

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சற்று குறைந்த அளவில்(80%) அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

கணக்கு வாய்ப்பாடு.. பள்ளிகள் ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்!

image

6-ம் வகுப்பு மாணவர்களில் 53% பேருக்கு மட்டுமே 10-ம் வாய்ப்பாடு வரை மட்டுமே தெரிவது கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் & தனியார் என 74,229 பள்ளிகளில் 21.15 லட்சம் மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம், மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனராம். உங்கள் கருத்து என்ன?

News July 9, 2025

அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடக்கூடாது: CS

image

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் சர்குலர் அனுப்பியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் சம்பளமும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!