News July 9, 2025

மக்கள் விரோத ஆட்சியை விரட்டும் புயல் இபிஎஸ்: வானதி

image

தமிழகத்தில் நடந்து வருவது தேச விரோத மற்றும் மக்கள் விரோத ஆட்சி என வானதி சீனிவாசன் சாடியுள்ளார். கோவையில் பேசிய அவர், இந்த ஆட்சியில் தொழில்துறையினர் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும், ஓரணியில் இருந்து திமுக ஆட்சியை விரட்டுவோம் என்றார். மேலும், தமிழகத்தில் நேற்று தான் புயல் மையம் கொண்டது எனவும், இன்று சூறாவளியாக சுழன்று கொண்டிருப்பதாகவும் இபிஎஸ்-ன் சுற்றுப் பயணம் குறித்து விளக்கம் அளித்தார்.

News July 9, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,000-க்கும், சவரன் ₹72,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.

News July 9, 2025

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

image

அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து CM ஸ்டாலினை சந்தித்து 2026 தேர்தல் கூட்டணியை உறுதி செய்து வருகின்றனர். அந்த வகையில் வைகோவை தொடர்ந்து நேற்று திருமாவளவன் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார். தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, மமக, கொமதேக, மநீம, தவாக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News July 9, 2025

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் மூதாட்டியின் தனிப்பட நிலம்?

image

தனக்குச் சொந்தமான 2.15 ஏக்கர் நிலம் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி காஞ்சியைச் சேர்ந்த கம்சலா (68) என்பவர் சென்னை HC-ல் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட நிலத்தையே தான் பொது ஏலத்தில் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த HC, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை, ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News July 9, 2025

தோனியின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

image

தோனியின் நிகர சொத்து மதிப்பு ₹1,030 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், IPL-ல் அவர் தொடர்ந்து வருகிறார். இதில் மட்டும் ₹205 கோடி வருமானம் உள்ளது. இதுதவிர, பல்வேறு சிறு முதலீடுகளால் மாதம் ₹4 கோடி வருவாய் பெறுகிறார். 72 பிராண்டுகளுக்கு அவர் பிராண்டாக உள்ளதன் மூலம் ₹803 கோடி சம்பாதித்துள்ளார். மேலும், தனிவிமானம், 20-க்கும் மேலான உயர்தர பைக்ஸும் அவரிடம் உள்ளன.

News July 9, 2025

‘அழகாலே மயக்காதே..’ கீர்த்தி சுரேஷ் வைரல் Pics!

image

தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் காலடி எடுத்த வைத்த கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியா மட்டுமின்றி இந்திய சினிமாவின் மகாநடியாக உயர்ந்து நிற்கிறார். தற்போது இவரின் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படம் விரைவில் தமிழில் வெளிவர இருக்கிறது. அண்மையில் சென்னையில் நடந்த Global Buisness Conclave கலந்து கொண்ட பின் அவர் வெளியிட்ட போட்டோஷூட் ஸ்டில்ஸ் தான் இவை.

News July 9, 2025

CM ஸ்டாலின் தனிச் செயலாளர் தாயார் காலமானார்

image

CM ஸ்டாலினின், தனிச் செயலாளராக உள்ள சண்முகம் IAS-ன் தாயார் ராஜலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். பின்னர், ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பெற்ற அன்னையின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் அவரை இழந்து வாடும் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து கொள்வதாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

News July 9, 2025

நாளை 3-வது டெஸ்ட்: இன்னும் 18 ரன்கள் அடித்தால்…

image

நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் IND vs ENG 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இன்னும் 18 ரன்களை அடித்தால், ENG-ல் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த சாதனை தற்போது வரை Ex. வீரர் டிராவிட்டின் வசம் உள்ளது. அவர் 2002-ல், 6 இன்னிங்ஸில் 602 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 9, 2025

தொடக்கூடாத இடத்தில்.. அரசுப் பள்ளி மாணவர் வேதனை

image

தனது குரல் பெண் குரல் போல் உள்ளதால், செந்தில்குமார் சார் தவறாக பேசுகிறார், தொடக்கூடாத இடத்தில் தொடுகிறார் என்று மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார் கரூர், கருப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர். ஆசிரியரின் செயலால் 6 நாட்களாக ஸ்கூலுக்குப் போகவில்லை என்ற அவர், கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளார். மேலும், CM இதில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

News July 9, 2025

கடலூர் துயரம்: கிருஷ்ணசாமி பள்ளிக்கு இன்றும் விடுமுறை

image

விபத்து நிகழ்ந்து 24 மணி நேரம் கடந்த போதிலும் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் சோகத்தின் தடம் மாறவில்லை. விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் செழியன், சாருமதி, நிமிலேஷ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சக மாணவர்கள், ஆசிரியர்கள் சாருமதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைத்தது.

error: Content is protected !!