News July 9, 2025

ராஜூவுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா!

image

சில காலமாகவே சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் பழகி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்க சென்ற சமந்தா, நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட போட்டோக்களில் ராஜை இறுக்கமாக பிடித்தபடி, சமந்தா இருக்கும் போட்டோ தான் நெட்டிசன்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்துள்ளது. ஒருவேளை வெளிவரும் செய்திகளில் உண்மை இருக்குமோ என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.

News July 9, 2025

காமராஜர் பிறந்தநாளில் விஜய்யின் அடுத்த நகர்வு

image

1 கோடி உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மறைந்த Ex CM காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ‘My TVK’ என்ற செயலியையும் அவர் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. வேகமெடுக்கிறதா தவெக?

News July 9, 2025

சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

image

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.

News July 9, 2025

கொடுக்குற காசுக்கு மட்டும் கூவுங்கோ.. அக்கறையில் Infosys

image

ஒரு நாளில் 9.15 மணிநேரத்தை தாண்டி வேலை பார்த்தால் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் நுட்பத்தை Infosys கொண்டுவந்துள்ளது. ‘உங்கள் அர்ப்பணிப்பை பாராட்டுகிறோம், அதேநேரம் உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது’ என்றவாறு மெயிலும் அதிக நேரம் பணி செய்பவர்களுக்கு வருகிறதாம். முன்பு, இந்தியர்கள் வாரத்துக்கு 70 மணிநேரம் பணியாற்றினால்தான் நாடு பொருளாதார வளர்ச்சியை அடையும் என அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியிருந்தார்.

News July 9, 2025

பாஜகவை விட அதிமுகவே துரோகம் செய்கிறது: கனிமொழி

image

2024 தேர்தலில் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, தற்போது பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், பாஜகவை விட அதிமுகவே தமிழகத்திற்கு துரோகம் செய்வதாகவும் சாடினார். மேலும், மத்திய அரசு என்ன செய்கிறது, மாநில அரசு என்ன செய்கிறது என்றுகூட தெரியாமல் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று சிலர் வாக்கு கேட்டு வருவதாக விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

News July 9, 2025

கட்டுமான நலவாரியத்தின் கல்வி உதவித்தொகை உயர்வு!

image

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர், கேட்டரிங், உணவு தயாரித்தல், சேவை உள்ளிட்ட பட்டயப் படிப்புகளுக்கு(Diploma) ஆண்டுக்கு ₹3,000 வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் முனைவர் பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு ₹15,000 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படவுள்ளன. இதனால், பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயனடையும்.

News July 9, 2025

சிறுவர்களுக்கான பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

image

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் PAN கார்டு கட்டாயமாகும். குழந்தைகளின் பெயரில் முதலீடுகள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு இது பயன்படுகிறது. இதற்கு NSDL வெப்சைட்டில் அப்ளை செய்யும்போது Form 49A-ஐத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கு பான் கார்டு வரும்போது புகைப்படம், கையெழுத்து இல்லாமலே வரும். எனவே, 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் மீண்டும் விண்ணப்பித்து போட்டோ உடன் கார்டைப் பெறலாம்.

News July 9, 2025

ஓரணியில் திமுகவினரே இல்லை.. உள்கட்சி பூசல்

image

நேற்று நடைபெற்ற புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி, KN நேரு & ரகுபதி ஆகியோரின் போட்டோஸ் இருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த மெய்யநாதன் போட்டோ எங்கே என அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று கூறிவிட்டு, ‘ஓரணியில் திமுகவினரே இல்லை’ என ஒருவர் பேசியதால் பரபரப்பானது. முன்னதாக, நிர்வாகியை நேரு தாக்க பாய்ந்ததும் பேசுபொருளானது.

News July 9, 2025

பாலபாரதி உள்ளிட்ட 300 பேர் அதிரடி கைது!

image

தேனி ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் Ex MLA பாலபாரதி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் CITU, LPF உள்ளிட்டோர் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். உங்கள் ஊர் நிலவரம் என்ன?

News July 9, 2025

FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

image

நேற்று மாலை ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(ஜூலை 9) சரிவுடன் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிந்து 83,569 புள்ளிகளிலும், நிஃப்டி 30 புள்ளிகள் சரிந்து 25,492 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Wipro, Tata Steel, ICICI Bank, HCL Tech உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று சரிவைக் கண்டுள்ளன.

error: Content is protected !!