India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.
தன்னை குட்டி தளபதி என்று அழைப்பதை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார். ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி பகிரும் காட்சியில் விஜய் சார் எனக்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தேன். படம் வெளியான பிறகு பலரும் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் அழைத்தனர். இதை நான் ஏற்கவில்லை. அண்ணன் அண்ணன் தான், தம்பி என்றுமே தம்பி தான் என சிவகார்த்திகேயன் பேச அரங்கம் அதிர்ந்தது.
மழைக்காலம் என்பதால் பல இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த அக்டோபரில் பரவத் தொடங்கிய ஃப்ளூ பாதிப்பு, இந்தாண்டு மார்ச் வரையிலும் நீடித்தது. ஒரு முறை வந்த ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு வராது எனக் கூறும் டாக்டர்கள், அதன்பின் அதனுடைய மரபணு முழுமையாக மாற்றம் அடைவதால் மீண்டும் வரலாம் என்கின்றனர். அதனால் ஆண்டுதோறும் தடுப்பூசி அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஜாக்கிரதை மக்களே!
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமியை நேற்று சந்தித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். ரங்கசாமி – விஜய் இடையே நல்ல நட்புறவு இருக்கும் சூழலில், இது கூட்டணிக்கான அச்சாரமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபருக்கு வங்கி கடன்களுக்கான குறைந்தபட்ச CIBIL ஸ்கோர் தேவையில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், வங்கிகள் இனி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் CIBIL ஸ்கோர் 0 ஆக இருந்தாலும், லோனை திருப்பி செலுத்துவதற்கான ஆவணங்களை மட்டும் ஆராய்ந்து லோன் வழங்க வேண்டும். தேவையில்லாத காரணங்களை கூறி விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Gpay, Phonepe-ல தவறான நபருக்கு பணம் அனுப்பிட்டா, அத காந்தி கணக்குல எழுதவேண்டிய அவசியமில்ல. இந்த சிம்பிள் வழிகள் மூலம் பணத்த திரும்பப் பெறலாம் ▶நீங்க பணம் அனுப்புன நபரை தொடர்புகொண்டு பணத்த திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க ▶அந்நபர் மறுக்கும் பட்சத்தில் உங்களோட வங்கியில நீங்க முறையிடலாம் ▶புகார் கொடுத்தும் வேலை நடக்கலன்னா, NPCI-யோட இலவச எண் 1800-120-1740-க்கு அழைத்து புகாரளியுங்க. SHARE IT.
கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.
புகைப்படத்தில் உள்ள இருவரையும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்விருவரின் தந்தையும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு காலம் கடந்த பெருமை சேர்த்த ஜாம்பவான்கள். பேட் வைத்திருப்பர் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் மகன் ரனுக், சுழற்பந்து வீசுபவர் முத்தையா முரளிதரனின் மகன் நரேன். உள்ளூர் போட்டியில் இருவரும் விளையாடிய புகைப்படம் இது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளிலேயே உள்ளது.
ஃபோனில் அதிக நேரத்தை செலவிடும் உங்கள் குழந்தை, அதில் என்ன பார்க்கிறது என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? அவர்கள் ஃபோனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும். Moniterro என்ற App மூலம் இதை நீங்கள் செய்யலாம். இந்த APP உங்கள் குழந்தையின் ஃபோனுக்கு வரும் Calls, SMS-ஐ கண்காணிப்பதோடு, அவர்கள் எவ்வளவு நேரம் ஃபோன் பார்க்க வேண்டும் என்பதையும் நிர்ணயிக்க உதவுகிறது. SHARE.
கூலி படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. வட அமெரிக்காவில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அங்கு மட்டும் சுமார் ₹60 கோடி வசூலாகியுள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் இப்படம் ₹500 கோடி வரை கலெக்ஷனாகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
Sorry, no posts matched your criteria.