News April 28, 2025

பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ காலமானார்

image

‘RuPaul’s Drag Race’ நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ(44) காலமானார். பிலிப்பைன்ஸில் பிறந்த பியான்கா, தனது 10 வயதில் தாய், சகோதரருடன் அமெரிக்காவின் குயின்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் பெரும் சிரமத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்ற அவர் அண்மையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், திடீரென உயிரிழந்தார். #RIP

News April 28, 2025

இன்று இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

கோடை வெயில் வாட்டும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது. நாளை முதல் மே 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News April 28, 2025

IPL-ல் புது வரலாற்றை எழுதிய கோலி!

image

IPL-ன் 11 சீசன்களில் 400-க்கும் அதிகமான ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை கிங் கோலி படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்த 10 போட்டிகளில், 6 அரை சதங்கள் உள்பட 63.29 ஆவரேஜுடன் அவர் 443 ரன்களை எடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல், ஒரு சீசனில் அதிக ரன்கள் (973) எடுத்த வீரராகவும் அவர் உள்ளார்.

News April 28, 2025

ஜல்லி விலையும் ரூ.1,000 குறைப்பு

image

ஜல்லி விலையையும் ரூ.1,000 குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டிட கட்டுமான வேலைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை அண்மையில் ரூ.1,000 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நேற்று கல்குவாரி, கிரசர் மற்றும் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடந்தது. அதில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலையை ரூ.1,000 குறைக்க முடிவு செய்யப்பட்டது.

News April 28, 2025

என்னது ‘கனிமா’ இந்த பாட்டோட காப்பியா!

image

‘மன்மதன்’ படத்தில் வரும் ‘என் ஆசை மைதிலியே’ பாடலை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் ‘கனிமா’ பாடலை உருவாக்கியதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இசைக்கோர்வை, சவுண்ட் மிக்சிங், பாடலின் எமோஷ்னல் டோன் என அனைத்தும் அந்த பாடலை மனதில் வைத்து உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். மேலும், ‘கனிமா’ பாடல் உருவான விதம், BTS காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

ஆரஞ்ச் தொப்பியை தட்டித் தூக்கிய ‘ரன் மெஷின்’..!

image

ஐபிஎல் வந்தாலே கோலியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிக ரன்கள் குவித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை அவர் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 443 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ்(427), சாய் சுதர்சன்(417), பூரன்(404), மார்ஷ்(378) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த சீசன் முடியும்போது ஆரஞ்ச் தொப்பியை யார் கைப்பற்றுவார்?

News April 28, 2025

தினமும் காலை இதை செய்வதால்…

image

சூர்ய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்கும் ஆசன முறையாகும். தினமும் காலை இதனை செய்வதால் ✦ரத்த ஓட்டம் சீராகும். இதய துடிப்பு மேம்படும் ✦அனைத்து தசைகளுக்கும் அழுத்தம் கிடைப்பதால், தசைகள் புத்துணர்ச்சி பெறும் ✦பதட்டம் குறையும். மனதில் அமைதியும் தெளிவும் கிடைக்கும் ✦காலையில் சூர்ய நமஸ்காரம் செய்வது, கலோரிகளை எரித்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது ✦ நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். SHARE IT.

News April 28, 2025

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

image

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இன்று (ஏப்.28) முதல் ஜூன் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடக்கிறது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2025

இந்தியாவில் வாழ விடுங்கள்: கெஞ்சும் பாக். பெண்!

image

இந்தியரை திருமணம் செய்து, 2 குழந்தைகளை பெற்று, 35 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாரதா பாய், தற்போது அவரது சொந்த நாடான PAK-கிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் நாடு திரும்ப ஒடிஷா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு தனக்கென யாரும் இல்லை எனவும், தயவுசெய்து குடும்பத்தையும், தன்னையும் பிரித்துவிட வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியபடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 28, 2025

இபிஎஸ்-சை முன்னிறுத்தியே தேர்தலில் போட்டி: வேலுமணி

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இபிஎஸ்.சை முன்னிறுத்தியே போட்டி என்று அதிமுக EX அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய வேலுமணி, தேர்தலில் இபிஎஸ் பெயரை தெரிவித்தே மக்களிடம் வாக்குகள் கோரப்படும் என்று கூறினார். இபிஎஸ்.சா? ஸ்டாலினா? என்றே 2026 தேர்தல் போட்டி களம் இருக்கும் என்றும் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டார்.

error: Content is protected !!