India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: இல்வாழ்க்கை ▶குறள் எண்: 44 ▶குறள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். ▶பொருள்: பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
மகாராஷ்டிராவில் மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்த வழக்கில் சிற்பி ஜெய்தீப் ஆப்தே தானேயில் கைது செய்யப்பட்டார். ராஜ்கோட்டில் பிரதமர் மோடி திறந்து வைத்த சிலை கடந்த ஆக.26ஆம் தேதி உடைந்து விழுந்தது. 35 அடி உயர சிலையின் கை, கால், தலை என தனித்தனியாக சுக்குநூறாக நொறுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை விசாரணை நடத்திய நிலையில் சிற்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது வீரர்களின் செயல்பாட்டால் இந்தியா பெருமை கொள்வதாகவும், இதுவரை இல்லாத வகையில் இந்த பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிக பதக்கங்களை வென்றது நமது வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் உறுதியை காட்டுவதாக வாழ்த்தியுள்ளார்.
▶செப்டம்பர்-5 (ஆவணி 20) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:45-11:45 AM ▶கெளரி நேரம்: 12:15-01:15 AM & 06:30-07:30 PM ▶ராகு காலம்: 01:30-03:00 PM ▶எமகண்டம்: 06:00-07:30 AM ▶குளிகை: 09:00-10:30 AM ▶திதி: திரிதியை ▶நட்சத்திரம்: உத்திரம் ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶யோகம்: மரண, சித்த யோகம் ▶சந்திராஷ்டமம்: சதயம்.
இன்று (செப்டம்பர் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங். இறுதிப் போட்டியில் போலந்து வீரர் லூகாஸ் சிகெக்கை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். 4 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் 15ஆவது இந்தியா முன்னேறியுள்ளது. ஏற்கனவே, கலப்பு இரட்டையர் பிரிவில் ஷீதல் தேவி, ராகேஷ் குமார் ஜோடி வெண்கலம் வென்றனர்.
இன்று (செப்டம்பர் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கட்சித் தாவல் தடை சட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்படும் MLA-க்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என இமாச்சல் காங்கிரஸ் அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. அம்மாநிலத்தில் 5 ஆண்டுகள் MLA-வாக பணியாற்றியவர்களுக்கு, மாதம் ரூ.36 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். அங்கு கடந்தாண்டு கட்சி மாறியதால் 6 CONG MLA தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். MLA-க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளதாக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஏன் சினிமாவை மட்டும் சொல்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ள அவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய விசாகா கமிட்டியின் பரிந்துரை பின்பற்றப்பட வேண்டும் என்றார். அத்துடன், இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
*மேஷம் – இன்பம் உண்டாகும் *ரிஷபம் – சுகமான நாளாக அமையும் *மிதுனம் – ஆக்கத்துடன் செயல்படுங்கள் *கடகம் – வீண் செலவு ஏற்படும் *சிம்மம் – போட்டி உண்டாகும் *கன்னி – உதவி கிடைக்கும் *துலாம் – வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் *விருச்சிகம் – நல்லது நடக்கும் *தனுசு – வெற்றி உண்டாகும் *மகரம் – அச்சம் கொள்ள வேண்டாம் *கும்பம் – ஏமாற்றம் கிடைக்கும் *மீனம் – கவலை உண்டாகும்.
Sorry, no posts matched your criteria.