News September 5, 2024

மூலவர், உற்சவர் என்ன வித்தியாசம்?

image

கோயிலில் மூலவர், உற்சவர் ஆகிய 2 ரூபங்களில் இறைவன் எழுந்தருளி இருப்பார். இதுகுறித்து ஆன்மிகம் என்ன சொல்கிறது என இங்கு பார்க்கலாம். கோயில் கருவறையில் கற்சிலை ரூபத்தில் காட்சியளிப்பவர் மூலவர் ஆவார். அவர் முன்பு, வெண்கல சிலையாக இருப்பவர் உற்சவர். இருவருக்கும் தினமும் பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கும். விழாக்காலங்களில் உற்சவரே திருவீதி உலா கொண்டு வரப்படுவார். ஆனால் இருவரையும் வழிபடலாம். SHARE IT

News September 5, 2024

வெளி மாநிலத்தவருக்கு வேலையா.. ராமதாஸ் கண்டனம்

image

ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரை வார்க்கக் கூடாதென டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமனத்தில் 90%க்கும் கூடுதலான வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவருக்கு தாரைவார்க்க ஆலை நிர்வாகம் சதி செய்து வருகிறது என கூறியுள்ளார். சி, டி பிரிவு பணிகளை உள்ளூர் மக்களூக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News September 5, 2024

இன்று இடி மின்னலுடன் மழை கொட்டும்: IMD

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் முன்னறிவித்து உள்ளது. மேலும், நாளை முதல் 10ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

News September 5, 2024

யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?

image

பசு காவலர்கள் என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என, சமீபத்தில் கொல்லப்பட்ட ஆர்யன் மிஸ்ராவின் (20) தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகள் 2 மாதங்களுக்குள் கைது செய்யப்படவில்லை என்றால் தானும், தனது மனைவியும் தற்கொலை செய்து கொள்வதாக தந்தை சியாநந்த் மிஸ்ரா கையறுநிலையில் கூறியுள்ளார். பசு காவலர்களால் கடந்த ஆக்.24ல் மகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

News September 5, 2024

‘தி கோட்’ வெற்றி பெற சீமான் வாழ்த்து

image

விஜய்யின் ‘தி கோட்’ படம் வெற்றி பெற சீமான் வாழ்த்தியுள்ளார். தவெக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்காமல் 21 கேள்விகளை கேட்டு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகளில் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டுதான் நடத்தினார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அண்ணன் – தம்பி என்ற பாசத்தில் விஜய்யின் மாநாடு சிறக்கவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

News September 5, 2024

சென்னையில் பிறந்தவருக்கு பம்பர் பரிசு

image

சென்னையில் பிறந்த அமெரிக்க இஞ்சினியரான பண்ட்வால் ஜெயந்த் பாலிகா, 2024ஆம் ஆண்டுக்கான மில்லினியம் தொழில்நுட்ப பரிசை (€1 மில்லியன்) வென்றுள்ளார். உலகளவில் மின்சாரம், பெட்ரோல் நுகர்வை பெரிதளவு குறைக்கும் வகையிலான அவரது Insulated Gate Bipolar Transistor கண்டுபிடிப்பிற்கு பரிசு கிடைத்துள்ளது. சென்னை ஐஐடியில் கிடைத்த படிப்பும், கடுமையான பயிற்சியும் வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

News September 5, 2024

தினமும் தக்காளி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

image

புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தக்காளியில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆன்டி ஆக்ஸிடென்ட்களின் சிறந்த ஆதாரமாக உள்ளதால், இதை தினமும் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைப்பதாக அறிவுறுத்துகின்றனர். கொலஸ்ட்ரால், சரும, இதய பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது. மழை காலங்களில் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

News September 5, 2024

மனைவி குறித்து மனம் திறந்த விக்ரம்

image

மனைவி ஷைலஜா தனது வாழ்க்கையில் கிடைத்தது மகிழ்ச்சி என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். தான் ஒரு பாதி இந்து, பாதி கிறிஸ்துவர், ஷைலஜா மலையாளி என்பதால் திருமணத்திற்கு சிக்கல்கள் எழும் சூழல் இருந்ததாகவும், இருப்பினும் ஷைலஜா தனது வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி என அவர் கூறியுள்ளார். மேலும், ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க மனைவி மறுத்ததாகவும், பின்னர் தனது கனவுகளை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

ஆண்களை ஓவர்டேக் செய்த பெண்கள்

image

இந்தியாவில் செயல்படும் சொமோட்டோ, டெல்ஹிவரி, பேடிஎம், மாமா எர்த் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக ஊதியம் வாங்குவது அந்நிறுவனங்களின் ஆண்டறிக்கையில் தெரியவந்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தில் பெண்கள், ஆண்களை விட 160% அதிகம் ஊதியம் வாங்குகின்றனர். அதேசமயம், நைக்கா நிறுவனத்தில் ஆண்களை விட 27% குறைவாக பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். மேலும், 2024-ல் பல டெக் நிறுவனங்களில் சம்பளம் குறைந்துள்ளது.

News September 5, 2024

IPL-க்கு மவுசு குறைந்ததா?

image

IPL-ன் மதிப்பு 2024-ல் ₹82,700 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் இதன் மதிப்பு ₹92,500 கோடியாக இருந்த நிலையில், 10.6% குறைந்துள்ளதாக D&P அட்வைசரி வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதே வேளையில், மகளிர் பிரீமியர் லீக்கின் மதிப்பு ₹1,250 கோடியில் இருந்து 8%, ₹1,350 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், மிகவும் மதிப்பு வாய்ந்த அணியாக மும்பை முதல் இடத்திலும், சென்னை 2ஆம் இடத்திலும் இருக்கிறது.

error: Content is protected !!