News September 5, 2024

சென்னையில் பிறந்தவருக்கு பம்பர் பரிசு

image

சென்னையில் பிறந்த அமெரிக்க இஞ்சினியரான பண்ட்வால் ஜெயந்த் பாலிகா, 2024ஆம் ஆண்டுக்கான மில்லினியம் தொழில்நுட்ப பரிசை (€1 மில்லியன்) வென்றுள்ளார். உலகளவில் மின்சாரம், பெட்ரோல் நுகர்வை பெரிதளவு குறைக்கும் வகையிலான அவரது Insulated Gate Bipolar Transistor கண்டுபிடிப்பிற்கு பரிசு கிடைத்துள்ளது. சென்னை ஐஐடியில் கிடைத்த படிப்பும், கடுமையான பயிற்சியும் வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

News September 5, 2024

தினமும் தக்காளி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

image

புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தக்காளியில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆன்டி ஆக்ஸிடென்ட்களின் சிறந்த ஆதாரமாக உள்ளதால், இதை தினமும் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைப்பதாக அறிவுறுத்துகின்றனர். கொலஸ்ட்ரால், சரும, இதய பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது. மழை காலங்களில் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

News September 5, 2024

மனைவி குறித்து மனம் திறந்த விக்ரம்

image

மனைவி ஷைலஜா தனது வாழ்க்கையில் கிடைத்தது மகிழ்ச்சி என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். தான் ஒரு பாதி இந்து, பாதி கிறிஸ்துவர், ஷைலஜா மலையாளி என்பதால் திருமணத்திற்கு சிக்கல்கள் எழும் சூழல் இருந்ததாகவும், இருப்பினும் ஷைலஜா தனது வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி என அவர் கூறியுள்ளார். மேலும், ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க மனைவி மறுத்ததாகவும், பின்னர் தனது கனவுகளை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

ஆண்களை ஓவர்டேக் செய்த பெண்கள்

image

இந்தியாவில் செயல்படும் சொமோட்டோ, டெல்ஹிவரி, பேடிஎம், மாமா எர்த் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக ஊதியம் வாங்குவது அந்நிறுவனங்களின் ஆண்டறிக்கையில் தெரியவந்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தில் பெண்கள், ஆண்களை விட 160% அதிகம் ஊதியம் வாங்குகின்றனர். அதேசமயம், நைக்கா நிறுவனத்தில் ஆண்களை விட 27% குறைவாக பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். மேலும், 2024-ல் பல டெக் நிறுவனங்களில் சம்பளம் குறைந்துள்ளது.

News September 5, 2024

IPL-க்கு மவுசு குறைந்ததா?

image

IPL-ன் மதிப்பு 2024-ல் ₹82,700 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் இதன் மதிப்பு ₹92,500 கோடியாக இருந்த நிலையில், 10.6% குறைந்துள்ளதாக D&P அட்வைசரி வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதே வேளையில், மகளிர் பிரீமியர் லீக்கின் மதிப்பு ₹1,250 கோடியில் இருந்து 8%, ₹1,350 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், மிகவும் மதிப்பு வாய்ந்த அணியாக மும்பை முதல் இடத்திலும், சென்னை 2ஆம் இடத்திலும் இருக்கிறது.

News September 5, 2024

நம்ம தமிழ் பெருமை: தினம் 4

image

*தமிழர் நாடு: சேர நாடு- கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். *சோழ நாடு- தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள். *பாண்டிய நாடு: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்கள். *தொண்டை நாடு- காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள்.

News September 5, 2024

வ.உ.சி சந்ததிகளுக்கு இப்படி ஒரு நிலையா?

image

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வழித்தோன்றல்களுக்கு அரசு உதவ வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். வ.உ.சி குடும்பத்தினர் சிரமமான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், எள்ளு பேத்தி சாய்லட்சுமி அரசுப் பணியில் இருந்து குறுகிய காலத்தில் ஓய்வு பெற்றதால் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சாய்லட்சுமிக்கு அரசுப் பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News September 5, 2024

கெத்து காட்டும் இந்திய வீரர்கள்

image

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் கிளப் எறிதல் இறுதிப்போட்டியில் 34.92 மீ எறிந்து தங்கம் வென்றார் இந்திய வீரர் தரம்பிர். இதன் மூலம் அதிக தூரம் வீசிய ஆசிய சாதனையை படைத்தார். இது கிளப் எறிதலில் இந்தியா பெறும் முதல் தங்கமாகும். அதேபோல், ப்ரனவ் சூர்மா என்ற இந்திய வீரர் 34.59 மீ எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் முதல் இரண்டு இடத்தை இந்தியர்கள் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

News September 5, 2024

கலீல் ஜிப்ரான் பொன்மொழிகள்

image

*இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உங்களிலும், உங்களோடும், உங்களுக்காகவும் உள்ளன. *பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது. *எல்லோராலும் கேட்க முடியும், ஆனால் உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். *நீங்கள் யாருடன் சிரித்தீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடலாம், ஆனால் நீங்கள் யாருடன் அழுதீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.

News September 5, 2024

‘தி கோட்’ பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

image

‘தி கோட்’ படத்தில் நடித்துள்ள பிரபுதேவாவிற்கு ₹2 கோடி, பிரசாந்திற்கு ₹75 லட்சம், ஜெயராமிற்கு ₹50 லட்சம், சிநேகாவிற்கு ₹30 லட்சம், மோகனுக்கு ₹40 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு ₹10 கோடியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு ₹3 கோடியும் ஊதியமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் இன்று வெளியாகிறது.

error: Content is protected !!