India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்ற சந்தேகம் எழுவதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் குற்றஞ்சாட்டியுள்ளார். வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், விளையாட்டு வீரர்கள் அரசியல் வலைக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் காங்கிரஸில் சீட்டு பெற முயல்வதாகவும் கூறினார்.
குடும்பத்தார் மற்றும் படக்குழுவினருடன் நேற்றிரவு விஜய் ‘GOAT’ திரைப்படத்தை பார்த்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், அவரது தாய், தந்தை, மனைவி, குழந்தைகளும், வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள NFDCல் படம் பார்த்துள்ளார். இன்று ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்னதாகவே அவர் படம் பார்த்ததாகத் தெரிகிறது.
திட்டமிட்டபடி விக்கிரவாண்டியில் செப்.23ம் தேதி தவெக மாநாடு நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். பல்வேறு காரணங்களால் மாநாடு ஜனவரி மாதம் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என்றும், மாநாட்டு பணிகள் விரைவுபடுத்தப்-பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த வாரம் மாநாட்டு திடலை விஜய் பார்வையிட உள்ளதாகவும், முக்கிய பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளதாகவும் நிர்வாகிகள் கூறினர்.
FIXED டெபாசிட்டுக்கு வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ளலாம். *எஸ்பிஐ – 6.5% முதல் 7.25% * இந்தியன் வங்கி – 6.1% முதல் 7.25% * கனரா – 6.7% முதல் 7.25% *பிஎன்பி – 6.5% முதல் 7.25% * இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 6.5% முதல் 7.3% *ஆக்சிஸ் – 6.7% முதல் 7.2% *எச்டிஎப்சி – 6.6% முதல் 7.4% *ஐசிஐசிஐ வங்கி – 6.7% முதல் 7.25% *சிட்டி யூனியன் – 6.25% முதல் 7.25%. இந்தத் தகவலை பகிருங்க.
மருத்துவ உதவிகளுக்கு மக்கள் அவதியுற கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளை அமல்படுத்தி அதற்கான எண்களையும் அரசு அறிவித்துள்ளது. அவை என்னென்ன எண்கள் என இங்கு பார்க்கலாம். 108, 102, 112 ஆகியவை உடனடி ஆம்புலன்ஸ் சேவைக்கான எண்கள் ஆகும். இவற்றை தொடர்பு கொண்டால், ஆம்புலன்ஸ் வீடு தேடி வரும். இது தவிர 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவசர மருத்துவ உதவிகள் வீடு தேடி வரும். SHARE IT
எந்த வங்கியிலும் பென்ஷனை ஓய்வூதியதாரர்கள் எடுக்கும் முறை 2025 ஜன. 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான புதிய விநியோக திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஒப்புதல் அளித்தார். தற்போது EPFO அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டுமே பென்ஷனை எடுக்க முடியும். ஊர் மாறிச் செல்லும்போது, அதே வங்கிக்கே வர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘G.O.A.T’ திரைப்பட காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘G.O.A.T’ திரைப்படம் இன்று வெளியானது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் காலை 9 மணிக்குதான் இப்படம் வெளியாகிறது. இந்த சூழலில் சுவாரஸ்யமான காட்சிகள் Spoilerகளாக கசிந்துள்ளன.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, SCஇல் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த மனுவை இன்று விசாரிக்க உள்ளது. மனுவில், தொடர்ந்து தாம் சிறையில் இருக்கும் வகையில் தீட்டப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சிபிஐ கைது நடவடிக்கை இருப்பதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்
இந்திய விமானப்படை அலுவலகங்களில் கிளார்க் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர், ராஜஸ்தான், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமர்த்தப்படுவர். வயது வரம்பு 18- 25 வரை ஆகும். வயதில் எஸ்சி- எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் விலக்கு உண்டு. கூடுதல் தகவல்களை இந்திய விமானப்படை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். SHARE IT
டிரோன்களில் ஒரு சீன உதிரிபாகம் கூட இல்லாத வகையில் இந்திய ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் டிரோன்களை வாங்கும் போது, அதில் எந்தவொரு சீன உதிரிபாகமும் இல்லாததை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இம்மாத இறுதியில் தயாரிப்பு நிறுவனங்களை லடாக் அழைத்து, டிரோன்களை காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.