News September 5, 2024

வரி செலுத்துவதிலும் ‘King’

image

FY2023-24இல் கோலி ₹66 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். கிரிக்கெட் பிரபலங்களில் அதிக IT கட்டியவர்களின் பட்டியலை Fortune India வெளியிட்டுள்ளது. இதில் சச்சின், தோனி ஆகியோரின் கூட்டு மதிப்புக்கு இணையாக கோலி வரி செலுத்தியுள்ளார். அதாவது, தோனி ₹38 கோடியும், சச்சின் ₹28 கோடியும் IT கட்டியுள்ளனர். கங்குலி ₹23 கோடி, ஹர்திக் பாண்டியா ₹12 கோடி, ரிஷப் பண்ட் ₹10 கோடி IT கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

News September 5, 2024

சிறு வயது முதலே சீண்டல்.. சிம்ரன் வேதனை

image

சிறு வயது முதலே பாலியல் சீண்டலை எதிர்கொண்டு உள்ளதாக சிம்ரன் வேதனை தெரிவித்துள்ளார். நடிகைகள் தெரிவிக்கும் புகார்கள் குறித்த தனது கருத்துகளை சிம்ரன் வெளியிட்டுள்ளார். அப்போது அவர், தாமும் சீண்டல்களை எதிர்கொண்டு உள்ளதாகவும், தற்போது அதுகுறித்த தகவலை வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இத்தகைய பிரச்னைகளை எதிர்த்து போராட வேண்டும், அமைதி காக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

News September 5, 2024

தமிழகத்தில் 3 புதிய toll plazas

image

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. அதன்படி, விழுப்புரம், தி.மலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திறக்க முடிவு செய்துள்ளது. விழுப்புரம் – நங்கிளிகொண்டான், தி.மலை – கரியமங்கலம், கிருஷ்ணகிரி – நாகம்பட்டியில் புதிய சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 5, 2024

விஜய்க்கு ஆதரவாக பேசியது ஏன்? தமிழிசை விளக்கம்

image

தவெகவிற்கான அங்கீகாரத்திற்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என தமிழிசை செளந்தரராஜன் கூறினார். தேர்தல் ஆணையம் தான் அதனை முடிவு செய்யும் என்று கூறிய அவர், அரசியலுக்கு புதியவர் என்பதால் விஜய்க்கு ஆதரவாக பேசியதாக விளக்கமளித்தார். புதிய தம்பிக்கு கொடுத்த ஆதரவு என்பது கூட்டணிக்கான அழைப்பு அல்ல என்றும் மறுப்பு தெரிவித்தார். முன்னதாக, விஜய் கட்சியை பார்த்து திமுக பயப்படுவதாக அவர் விமர்சித்திருந்தார்.

News September 5, 2024

டீச்சர் டார்ச்சர் அல்ல..!

image

நமது முன்னேற்றத்தை கண்டு ஒருவர் மகிழ்கிறார் என்றால், ஒன்று நம் பெற்றோராக இருக்க வேண்டும் அல்லது ஆசிரியராக இருக்க வேண்டும். பெற்றோருக்காவது சுயநலம் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள்? தோளில் தூக்கி வளர்த்தவர் தந்தை என்றால், தோளை தட்டி உலகை காட்டியவர் ஆசிரியர். “என்ன பாத்தாலே ஓடுவ.. இன்னைக்கு நீ பெரிய டாக்டரா டா” என அதட்டி பெருமைப்படும் ஜீவன்களான டீச்சர்கள் டார்ச்சர் அல்ல. டார்ச்பேரர்கள்.

News September 5, 2024

பிரணிதாவுக்கு ஆண் குழந்தை

image

நடிகை பிரணிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே அவருக்கு ஆர்னா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், தொடர்ந்து படத்தில் நடிக்க விரும்புவதாகவும், விரைவில் நடிப்புத் தொழிலுக்கு திரும்புவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழில் சகுனி, மாஸ், உதயன் உள்ளிட்ட படங்களில் பிரணிதா நடித்துள்ளார்.

News September 5, 2024

எனக்கு தலைக்கனமா? நிர்மலா சீதாராமன் வேதனை

image

சென்னைக்கு வருகை தந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிகழ்ச்சியொன்றில் உரையாற்றினார். அப்போது அவர், “என்னை பார்த்து பலரும், நான் தலைக்கனம் பிடித்தவர் போல பேசுவதாக கூறுகிறார்கள். அரசியலில் இருக்கும் ஒரு பெண், பிறந்த வீடு, புகுந்த வீட்டை விட்டுவிட்டு எங்கேயோ உள்ள டெல்லிக்கு சென்று தனியாக இருக்கும் போது, தன்னை தற்காத்துக் கொள்ள இப்படி பேச வேண்டியுள்ளது” என்றார்.

News September 5, 2024

GOAT மட்டுமல்ல.. டிரெண்டாகும் SK, த்ரிஷா

image

விஜய்யின் GOAT திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், அதில் உள்ள SPOILER-களையும் ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக லீக் செய்து வருகின்றனர். சிலர் சீன்களையும் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் பெயர்களை ரசிகர்கள் X தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். அப்படியென்றால், படத்தில் அவர்கள் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

News September 5, 2024

‘GOAT’ பப்ளிக் டாக்

image

‘GOAT’ திரைப்படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் வெளியானது. படம் பார்த்தவர்கள், எதிர்பாரா திருப்பங்களுடன் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதாக கூறுகின்றனர். இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பில் அட்டகாசம் செய்துள்ளதாகவும், De-aging தோற்றத்தில் வரும் விஜய்யின் VFX காட்சிகள் சுமார் ரகம் எனவும் பலர் முகம் சுளிக்கின்றனர். WAY2NEWSன் முழு விமர்சனத்திற்கு காத்திருங்கள்.

News September 5, 2024

என் நெஞ்சிக்குள்ள குடியிருக்கும்…

image

விஜய் உடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட BTS புகைப்படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வார்த்தைகள் எதுவும் தேவையில்லை என்றும், தனது G.O.A.T விஜய் அண்ணா எனவும் குறிப்பிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நெஞ்சில் கைவைத்தபடி விஜய் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. உங்களுக்கு G.O.A.T டிக்கெட் கிடைச்சிதா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!