India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய்யின் GOAT திரைப்பட தலைப்பில் சனாதனம் தெரிவதாக விசிக எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்து இல்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம். ‘என்றும் மாறாதது’ என்பதுதானே சனாதனத்தின் பொருள். இது தெரிந்துதான் விஜய் படத்துக்கு தலைப்பு வைத்தார்களா?” எனக் கேள்வியெழுப்பினார்.
எதிர்பாராத சூழ்நிலையில் எதிரிகளாக மாறும் தந்தையும், மகனும் பற்றிய கதைதான் ‘GOAT’. இரட்டை வேடத்தில் விஜய் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பாடல்கள் சுமார் ரகமாக இருந்தாலும், யுவனின் BGM அட்டகாசம். சண்டை காட்சிகள் சலிப்பு தர, படத்தின் நீளம் சற்று மைனஸாக உள்ளது. எனினும் தனது ஆஸ்தான ஸ்டைலில் காமெடி, ஆக்ஷன் என சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் வலு சேர்த்திருக்கிறார் வெங்கட்பிரபு. Way2News Rating 3/5.
அயோத்திக்கும், தமிழகத்திற்கும் இடையே சிறப்பு பிணைப்பு இருப்பதாக உ.பி. CM யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிேஷக விழாவில் பேசிய அவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் இலங்கை செல்லும் வழியில் ராமேஸ்வரத்தில் வழிபாடு நடத்தியதாகவும், அதேபோல் இலங்கையில் இருந்து நாடு திரும்பியபோது சீதாதேவியும் அங்கு வழிபாடு நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்னை? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மாநாடு நடத்த உரிய முறையில் அனுமதி கேட்டால், அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, பாஜக தரப்பில் தமிழிசை, நாதக தரப்பில் சீமான், அதிமுக தரப்பில் ஜெயக்குமார் என பலர் ஆதரவு குரல் தெரிவித்து வருகின்றனர். திமுக தரப்போ மவுனம் காத்து வருகிறது.
இந்தியாவிலேயே தலைசிறந்த கல்விமுறை தமிழகத்தில் இருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். CBSE பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது State Board பாடத்திட்டத்தில் தரமில்லை என கவர்னர் கூறியிருந்தார். இது குறித்து பேசிய உதயநிதி, உலகின் தலைச்சிறந்த மருத்துவர்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்றார். மேலும், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் State Boardஇல் படித்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் சனிக்கிழமைகளில் அலுவலகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முகூர்த்த தினம், பண்டிகை தினங்களில் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு, கூடுதல் டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்.
விஜய் படம் ரிலீஸ் என்றாலே கலகலப்பு, பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சில நேரங்களில் விஜய் – அஜித் மோதும் சம்பவங்களும் நடக்கும். ஆனால், இப்போது சற்று வித்தியாசமாக விஜய் ரசிகர்களுக்கும், விஜய்யின் தவெக நிர்வாகிகளுக்கும் நடுவிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்தில் GOAT திரைப்படம் பார்க்கும் போது, விஜய் ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் திடீரென இருதரப்பாக பிரிந்து மோதிக் கொண்டனர்.
டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ₹2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காலணி உற்பத்தியை விரிவுப்படுத்துவது குறித்து நைக் நிறுவனத்துடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. Optum நிறுவனம் அதன் தொழிலை திருச்சி, மதுரையில் தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
தெலங்கானாவில் காவல்துறையினருடன் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பத்ராத்ரி கோதாகுடம் மாவட்டம், காராகுரம் மண்டலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 தரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 போலீசார் பலத்த காயமடைந்ததாகவும், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் இன்று வெளியான GOAT படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு சர்ப்ரைஸ்களை இயக்குநர் வெங்கட் பிரபு வைத்துள்ளார். அதாவது, மறைந்த விஜயகாந்தை AI மூலம் உருவாக்கி நடிக்க வைத்துள்ளார். அத்துடன் சிவகார்த்திகேயன், திரிஷா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தாேனி ஆகியோரையும் நடிக்க வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.