India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 100 மீட்டர் (T12) பிரிவில் பங்கேற்ற அவர், 12.33 நொடிகளில் இலக்கை அடைந்ததுடன், 2வது இடத்தையும் பிடித்தார். முன்னதாக, அரையிறுதிக்கான போட்டியில், 100 மீ. தூரத்தை அவர் 12.17 நொடிகளில் கடந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியைச் சேர்ந்த சிம்ரன், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் பங்கேற்றுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கான SETC முன்பதிவு தொடங்கியுள்ளதாக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பணிபுரிவோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல, இன்று முதல் <
சிறுநீரகக் கற்களால் ஏற்படும் நீரடைப்பு, சிறுநீர் எரிச்சலைப் போக்கும் ஆற்றல் சிறுபீளைக்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது. டிரைடெர்பீன், ஏர்வோஸைடு, வனிலிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் முழு செடியுடன் நீர்முள்ளி, நெருஞ்சில் ஆகியவற்றை நீரில் கலந்து, நன்கு கொதிக்க வைத்து, 48 நாட்கள் குடிநீராக பருகிவந்தால், யூரியா & கிரியேட்டினின் அளவு குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அயர்லாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் சிமி சிங் உயிருக்கு போராடுகிறார். கல்லீரல் செயலிழந்ததால் உடல்நிலை மோசமாகி அவர் குர்கான் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மொகாலியை சேர்ந்த இவர், பஞ்சாபுக்காக U-14, U-17 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் அயர்லாந்துக்காக 35 ODI, 53 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ரவுடி திருவேங்கடத்தை போல, தனது கணவரையும் போலீசார் என்கவுண்ட்டர் செய்யக்கூடும் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறையில் பாதுகாப்பாக இருக்கும் நாகேந்திரனை எதன் அடிப்படையில் என்கவுண்ட்டர் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹83.98ஆக சரிந்துள்ளது. முன்னதாக செப்.3ஆம் தேதி ₹83.96 என்ற அதிகபட்ச சரிவை எதிர்கொண்டது. ரிசர்வ் வங்கியின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இறக்குமதிக்கு எதிராக டாலரின் தேவை அதிகரித்து வருவதால், ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு காட்சி மட்டுமே ஓடி முடிந்துள்ள நிலையில்,‘GOAT’ திரைப்படம் ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. இந்நிலையில், முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகி டெலிகிராம் செயலியில் பகிரப்படுவதால், படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பப்பாளி இலைச்சாறு தட்டணுக்களின் Counts அதிகரிக்கும் திறன் உடையது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும்போது, டாக்டரின் பரிந்துரைப்படி இதனை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். 10 மில்லி என்ற அளவு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அதேநேரம், கசப்பாக இருப்பதால் குழந்தைகளுக்கு குமட்டல் வராமல் இருக்க பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்க பரிந்துரைக்கின்றனர். Share it.
<<14005522>>ஆவின்<<>> நிர்வாக சீர்கேடுகளை வீடியோவாக வெளியிட்ட ஊழியரை சஸ்பெண்ட் செய்தது அராஜகத்தின் உச்சம் என இபிஎஸ் கண்டித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் ஆவின் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறிய CM, குற்றங்களை சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதில் சர்வாதிகாரியாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
உக்ரைனுடன் அமைதி பேச்சு நடத்த இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்த நாடுகளாக செயல்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன், ரஷ்ய அதிகாரிகள் இடையே இதுதொடர்பாக முதற்கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆனால் அது இன்னும் அமலாகவில்லை, அதன் அடிப்படையில் அமைதி பேச்சு நடக்கும் என புதின் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன்- ரஷ்யா இடையே சுமார் 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.