News September 5, 2024

விஜய் காரில் CM நம்பர் பிளேட் ஏன்? புஸ்ஸி ஆனந்த் பதில்

image

விஜய் காரில் CM என்ற நம்பர் பிளேட் வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு, புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார். GOAT திரைப்படத்தில் விஜய் TN 07 CM 2026 என்ற காரில் பயணிப்பார். 2026 தேர்தலில் விஜய் முதல்வராவார் என்பதன் குறியீடாக இதை ரசிகர்கள் பார்த்தனர். இது தொடர்பான பேசிய புஸ்ஸி ஆனந்த், “அதை நோக்கி தானே எங்களின் கட்சிப் பயணம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

News September 5, 2024

தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

image

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. HRCED ஆணையர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் வந்த பிறகு (2014 – 2024) பூஜை, அர்ச்சனை, தரிசனக் கட்டணமாக வசூலிக்கப்பட்டவை குறித்த ஆவணங்களை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை செப்.19-க்கு ஒத்திவைத்தது.

News September 5, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… கமிஷனர் அறிக்கை

image

BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான உண்மையான காரணம் & முக்கிய நபர்கள் குறித்து விரைவில் தெரிவிப்போம் என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90% விசாரணை முடிவடைந்துவிட்டதாகக் கூறிய அவர், அந்த வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார். அத்துடன், இந்த வழக்கில் கைதான 27 பேரின் சொத்துகள் முடக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News September 5, 2024

வெறும் வயிற்றில் காஃபி குடிக்கலாமா?

image

காலையில் தூங்கி எழுந்ததும் பலருக்கும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காஃபியில் உள்ள டானின் நெஞ்செரிச்சல், வாயுபிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும், வயிற்றில் அமில சுரப்பை அதிகரிக்கும் எனவும் கூறுகின்றனர். முடிந்தவரை வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.

News September 5, 2024

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழர்கள்

image

2024-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை 50 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில், மதுரை டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் உள்ளிட்டோருக்கு முர்மு விருதுகளை வழங்கினார்.

News September 5, 2024

மானியம் வழங்க வேண்டிய அவசியமில்லை: நிதின் கட்கரி

image

EV வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனியும் அரசு மானியம் வழங்க அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த BNEF மாநாட்டில் பேசிய அவர், தொடக்கத்தில் EV வாகனங்களைத் தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருந்தது. தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவுகள் கணிசமான அளவு குறைந்துள்ளன. இதன் காரணமாக FAME திட்டம் தேவையற்றதாக மாறியுள்ளது எனக் கூறியுள்ளார்.

News September 5, 2024

ஆஃபர்களை வாரி வழங்கும் JIO

image

8ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பல ஆஃபர்களை அறிவித்துள்ளது JIO நிறுவனம். அதன்படி, இன்று முதல் செப்.10 வரை, ₹899, ₹999, ₹3599க்கு ரீசார்ஜ் செய்தால் ₹700 வரை சலுகைகள் கிடைக்கும். ₹899, ₹999 ரீசார்ஜுக்கு 10 GB ஃபிரீ டேட்டா, 10 OTT தள ஃபிரீ சப்ஸ்கிரிப்ஷன். ₹2999க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 3 மாத ZOMATO கோல்டு மெம்பர்ஷிப் இலவசம். இதுதவிர ₹899 ரீசார்ஜ்-2 GB/d (90 D). ₹999 ரீசார்ஜ்-2 GB/d, (98 D).

News September 5, 2024

பொன்னொன்று கண்டேன்.. பெண் அங்கில்லை..!

image

டேட்டிங் & மேட்ரிமோனி செயலிகளில் உள்ள 78% பெண் ப்ரொஃபைல்கள் போலியானவை என்று YouGov ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 8 மெட்ரோ சிட்டிகளில் Singles மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இதுபோன்ற போலி செயலிகளால் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், 82% பேர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் ID’களை கட்டாயமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

News September 5, 2024

கசிந்த ஆப்பிள் ஐபோன் 16 விலை?

image

ஆப்பிள் ஐபோன் 16 மாடல்கள் வருகிற செப். 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்தியாவில் iPhone 16 விலை ₹66,300, iPhone 16 Plus ₹74,600 இருந்தும் விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல iPhone 16 Pro ₹91,200, iPhone 16 Pro Max ₹99,500 இருந்தும் விலை தொடங்கலாம் என கணிக்கப்படுகிறது. விலை தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.

News September 5, 2024

விஜய்யை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை: எ.வ.வேலு

image

விஜய் கட்சியை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். திமுக யாரையும் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும், நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதியே வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் ஆட்சியமைப்பார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களின் பிரச்னையை தீர்க்க எந்த அளவுக்கு முயற்சி செய்கிறோமோ, அந்த அளவுக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.

error: Content is protected !!