News September 5, 2024

மழைக்கால டிப்ஸ்

image

*மழை நீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து முகம் கழுவினால், பட்டு போல மிருதுவாக மாறும்.
*குளிர் காலத்தில் டார்க் நிற ஆடைகளை அணிவது இதமாக இருக்கும்.
*மழை நேரத்தில் ஜன்னல்களை திறக்க முடியாவிட்டால், கோல மாவுடன், உப்பு தூள் கலந்து ஜன்னல் விளிம்பில் தூவினால் எளிதில் திறக்கலாம்.
* மழை காலத்தில் உப்பு ஜாடியில் மூன்று பச்சை மிளகாய்களை போட்டு வைத்தால், ஜாடியில் ஈரம் கசியாது.

News September 5, 2024

நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

image

முகூர்த்த நாளை முன்னிட்டு நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். முகூர்த்த நாளை முன்னிட்டு அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

மீனவர்களை விடுவிக்க முதல்வர் அவசர கடிதம்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தள்ளுபடி செய்யவும், படகுகளை மீட்டுத் தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று புதுக்கோட்டையை சேர்ந்த 9 மீனவர்கள் கைதான நிலையில், 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

News September 5, 2024

பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

image

பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஜூடோ 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கபில் பர்மர், பிரேசில் வீரரை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இந்தியா 14ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் உள்ளிட்ட 25 பதக்கங்களை வென்றுள்ளது.

News September 5, 2024

₹9.4 கோடி நன்கொடை கொடுத்த மெகா குடும்பம்

image

வயநாடு, ஆந்திர வெள்ளம் ஆகியவற்றிற்கு மெகா குடும்பத்தினர் ₹9.4 கோடி நிவாரணம் வழங்கி உதவியுள்ளனர். சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மெகா குடும்பத்தினர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களில் பவன் கல்யாண் ₹6 கோடி, சிரஞ்சீவி, ராம் சரண் தலா ₹1 கோடி, சாய் துர்கா தேஜ் ₹25L, வருண் தேஜ் ₹15L ஆந்திராவிற்கு நிவாரணம் வழங்கியுள்ளனர். வயநாட்டிற்கு சிரஞ்சீவி, ராம் சரண் சேர்ந்து ₹1 கோடி வழங்கியுள்ளனர்.

News September 5, 2024

Apply Now: BECIL நிறுவனத்தில் வேலை

image

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. NURSING OFFICER பணியில் சேர தகுதியும் ஆர்வம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Diploma, B.Sc., Nursing. வயது வரம்பு: 21-30. ஊதிய விவரம்: ₹28,000. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு & நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.,17. கூடுதல் தகவல்களுக்கு இணைய <>BECIL<<>> முகவரியை கிளிக் செய்யவும்.

News September 5, 2024

TVK என்னுடையது: வேல்முருகன்

image

TVK தன்னுடைய கட்சி பெயரென தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சியின் மாநாடு, பெயர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தனது கட்சி பெயர்தான் TVK என்றும், ஆதலால் விஜய் அவரின் கட்சி பெயரை TVK என அழைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மற்றபடி, விஜய் அரசியலுக்கு வருவதை தாம் ஆதரிப்பதாகவும் வேல்முருகன் குறிப்பிட்டார்.

News September 5, 2024

ஆசிரியர் தினம் கொண்டாட திமுகவுக்கு அருகதை இல்லை

image

ஆசிரியர் தினம் கொண்டாட திமுக அரசுக்கு அருகதை இல்லை என ADMK குற்றஞ்சாட்டியுள்ளது. சென்னையில் பேசிய அக்கட்சி மூத்த தலைவர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சரா? இல்லை உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவரா? என கேள்வி எழுப்பினார். DMK அரசு பொறுப்பேற்றது முதல் கோரிக்கைக்காக ஆசிரியர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக ஜெயக்குமார் விமர்சித்தார்.

News September 5, 2024

என்னது, ₹2,000 கோடி ஊழலா… அதிமுகவுக்கு மஸ்தான் பதிலடி

image

வக்பு வாரிய சொத்து குறித்து ADMK தவறான தகவல் பரப்புகிறது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். வக்பு வாரிய சொத்துகள் முறைகேடாக கைமாறியதில் ₹2,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்த குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மஸ்தான், Ex மினிஸ்டர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் CBI வளையத்தில் இருப்பதை மறைக்க ஜெயக்குமார் பொய் சொல்லி வருவதாக கூறினார்.

News September 5, 2024

பாஜகவில் சீட் கிடைக்காததால் அமைச்சர் ராஜினாமா

image

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ஹரியானா அமைச்சர் ரஞ்சித் சிங் பதவி விலகியுள்ளார். அக்.5இல் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், 67 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில், ரஞ்சித் சிங் உள்ளிட்ட 95 பேருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனையடுத்து, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்த அவர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

error: Content is protected !!