India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் (72) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின் போன்ற சிந்தெடிக் போதைப்பொருட்களுக்கு அடிமையாக உள்ளதாக ஆளுநர் R.N.ரவி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் எளிதாக கிடைக்கும் வகையில் உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடி போதை வணிகம் நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், மாணவர்களின் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – வர்ஷினி ஜோடியின் திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். சில நாள்களுக்கு முன் நண்பர்களுக்கு சிபி சக்ரவர்த்தி பேச்சுலர் பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில், அவரது திருமணம் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, அட்லீ, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
போட்டியில் வென்று மைதானத்தில் இருக்கும் போது, நமது தேசிய கீதம் ஒலித்த தருணம் பெருமை மிக்கதாக இருந்ததாக, பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய கனவு நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாரா ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங்.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் COAL MINES PROVIDENT FUND நிறுவனத்தில் காலியாகவுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.6) கடைசி நாளாகும். ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் (10 இடங்கள்), சோஷியல் செக்யூரிட்டி உதவியாளர் (126) பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதற்கு CMPFO ஆள்சேர்ப்பு இணையதளத்தின் https://cmpfo.gov.in/இல் விண்ணப்பிக்கலாம்.
MBBS பாடத் திட்ட வழிகாட்டுதலை தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. போட்டியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த வழிகாட்டுதல்களுக்கு 3ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதின. இதன் எதிரொலியாக, அந்த வழிகாட்டுதலை திரும்ப பெறுவதாகவும், உடனடியாக ரத்து செய்வதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், நாளை முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
கிராம்பில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன. இதில் காணப்படும் Eugenol என்ற கலவை இயற்கையான அனெஸ்தட்டிக்காக செயல்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு கிராம்பை மென்று சாப்பிட்டால் பல்வலி, ஈறு, வாய் புண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். வைட்டமின் சி மற்றும் Eugenol போன்ற சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் இருப்பதால் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
இந்தியா அமைதியை விரும்பும் நாடு எனவும், ஆனால் அந்த அமைதியை நிலைநாட்ட, ராணுவம் எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் போர்களை சுட்டிக்காட்டி எதிர்கால சவால்களை முன் கூட்டியே அறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பாரம்பரிய மற்றும் நவீன போர் தந்திரங்களை அறிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கூட்டணி குறித்து தான் பேசியதை சிலர் வேண்டுமென்றே திரித்து கூறிவிட்டதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் ஆட்சியை அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், கூட்டணியை யாரும் விட்டுக் கொடுத்து போக வேண்டிய அவசியமில்லை என தான் பேசியதை சிலர் தவறாக திரித்து பேசி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தங்கள் கூட்டணி அருமையான கூட்டணி எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.