News September 6, 2024

13 மாவட்டங்களில் 1 மணி வரை மழை

image

இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.

News September 6, 2024

இங்கேயும் இருக்கு… பகீர் கிளப்பிய ஷில்பா ஷிண்டே

image

நடிக்க வந்த ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக, பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே மனம் திறந்துள்ளார். அவருக்கு தனது வயதில் பிள்ளைகள் இருப்பதால், அவர்களது நலன் கருதி அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். ஹேமா கமிட்டியின் அறிக்கை, தென்னிந்திய திரைத்துறையில் புயலை கிளப்பியுள்ளது. இந்த சூழலில், பாலிவுட்டிலும் பாலியல் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

News September 6, 2024

அறிவியல் வழியே முன்னேற்றம் கொடுக்கும்: CM

image

பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுக்குமாறு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும் என்றும் அறிவியல் வழியே முன்னேற்றம் தரும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். எதிர்கால சவால்களை எதிர்கொள்ள, சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News September 6, 2024

அமெரிக்கா புறப்பட்டார் ராகுல் காந்தி

image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் அமெரிக்காவில் ராகுல் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். இதையொட்டி டெல்லியில் இருந்து விமானத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி மக்களை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். டெக்சாஸ் பல்கலை.யிலும் ராகுல் காந்தி உரை நிகழ்த்தவுள்ளார்.

News September 6, 2024

CSK அணியின் லாபம் 4 மடங்கு அதிகரிப்பு

image

CSK லாபம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2024 நிதி ஆண்டுக்கான வருடாந்திர கணக்கை CSK தாக்கல் செய்துள்ளது. அதில், 2023இல் வரி செலுத்திய பிறகு கிடைத்த லாபம் ₹52 கோடி, 2024இல் ₹229 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வருமானம் 2022-23 நிதியாண்டில் ₹292 கோடி, 2023-24இல் ₹676 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. BCCI உரிமம், டிக்கெட் விற்பனை மூலம் வருவாய் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 6, 2024

அட… இது நல்லா இருக்கே!

image

கூகுள் நிறுவனம் ‘Ask Photo’ என்ற புதிய வசதியை சோதித்து வருகிறது. இது செயல்பாட்டுக்கு வரும்போது, குரல் மூலம் Music, Contact தேடுவதை போல, உங்கள் கேலரியில் உள்ள போட்டோக்களை எளிதாக தேடி எடுக்க முடியும். உதாரணமாக, கடந்த வாரம் அவுட்டிங் சென்றபோது என்ன சாப்பிட்டோம்? எனக் கேட்டால், அது தொடர்பான போட்டோ உடனடியாக கிடைக்க பெறும். யாருக்கெல்லாம் இந்த வசதி பிடித்திருக்கிறது? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 6, 2024

நீங்க போங்க… நான் பாத்துக்குறேன்

image

‘G.O.A.T’ படத்தில் SK வரும் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. குறிப்பாக, அவரது வசனம் Code Wordஆக இருக்குமோ? என ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர். “நீங்க இதைவிட ஏதோ முக்கியமான வேலையா போறீங்க. நீங்க அதை பார்த்துக்கோங்க. நான் இதை பார்த்துக்குறேன்” என விஜய்யிடம் SK கூறுகிறார். விஜய் அரசியலுக்கு செல்லும் சூழலில், சினிமாவில் அவரது இடத்தை SKவிடம் வழங்குவதாக ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

News September 6, 2024

பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

அரசு அனுமதி இல்லாமல் பள்ளிகளில் இனி எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சொற்பொழிவாளர் <<14033728>>சர்ச்சைக்குரிய<<>> வகையில் பேசிய நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பறந்துள்ளது.

News September 6, 2024

தெற்கு ரயில்வேயில் வேலை.. உடனே விண்ணப்பிங்க

image

தெற்கு ரயில்வேயில் பாரா மெடிக்கல் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நர்ஸிங் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட், பிசியாேதெரபிஸ்ட் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 143 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளோர் தெற்கு ரயில்வே இணையதளத்தில் வரும் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

News September 6, 2024

பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்கும் கிராமம்

image

மகாராஷ்டிராவில் உள்ள ஷெட்பாலில் பாம்புகளை செல்லப்பிராணிகளாக அந்த ஊர் மக்கள் வளர்த்து வருகின்றனர். அதிலும், நாகப்பாம்புகளே பெரும்பாலானோரின் செல்லப்பிராணியாக உள்ளது. சிவனின் வெளிப்பாடாக கருதுவதால், பாம்புகளை மிகவும் கண்ணியத்துடன் ஊர் மக்கள் நடத்துகின்றனர். தனி வழிபாடுகளும், சடங்குகளும் கடைபிடிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பாம்புகள் இருக்கும் போது, ஒருவர் கூட பாம்பு கடித்து உயிரிழக்கவில்லை.

error: Content is protected !!