India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கென்யாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கென்யாவின் நைரி கவுண்டியில் உள்ள ஆரம்பப் பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், தூங்கிக் கொண்டிருந்த 5-12 வயதுக்குட்பட்ட 17 மாணவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். அவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. மேலும், சிலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அழுத்தமான சூழ்நிலைகளில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலிதான் தன்னைப் பொறுத்தவரை சிறந்த பேட்ஸ்மேன் என்று தினேஷ் கார்த்திக் மனந்திறந்து பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “டெஸ்டில் 10,000 ரன்களை கடந்த ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேன் என்று எண்கள் சொல்லலாம். ஆனால், என்னைக் கேட்டால், கோலியின் பெயரைத்தான் சொல்வேன். உண்மையில் கோலி கடந்த ஒரு தசாப்தமாக தொடர்ந்து அசத்தி வருகிறார்” என்றார்.
சச்சின் டெண்டுல்கரின் பேட்டை பயன்படுத்தி, பாக். முன்னாள் வீரர் ஒருவர் அதிரடி சதமடித்துள்ளார். அப்ரிடிதான், அந்த வீரர் ஆவார். வக்கார் யூனிஸிற்கு சச்சின் பரிசாக அளித்த பேட்டை, 1996இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் பயன்படுத்தி 37 பந்துகளில் அவர் சதமடித்தார். இந்த சாதனையை கோரி ஆன்டர்சன் (36 பந்து) 2014இல் முறியடித்தார். அவர் சாதனையை டிவில்லியர்ஸ் (31 பந்து) 2015இல் முறியடித்தார்.
UPI-யில் சர்க்கிள் என்ற புது வசதியை தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. UPI-யில், பிரைமரி வாடிக்கையாளர் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்தநிலையில், சர்க்கிளில் பிரைமரி வாடிக்கையாளர் தனது குடும்ப உறுப்பினர், நண்பர்களை சேர்க்கவும், அவர்களும் பணப்பரிவர்த்தனை செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அதிகபட்சமாக ₹15,000 வரை அனுப்ப முடியும்.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு சக வீராங்கனை சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கும் பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்ததாகவும், ஆனால் அவற்றை ஏற்கவில்லை எனவும் கூறினார். இது, பெண் நீதிக்கான தங்களது போராட்டம் மீது தவறான கண்ணோட்டத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். மேலும், தனது போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதாக பேசிய அவர் மீது, தங்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய கோரிக்கை வைத்துள்ளனர். மகாவிஷ்ணு மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற நிலையில், திருப்பூரிலுள்ள அவரது அறக்கட்டளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொது அறிவு <<14034771>>வினா – விடை<<>> பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1.பிறக்கும் குழந்தைகளுக்கு 270 – 300 எலும்புகள் இருக்கும். 2.மக்ரானா 3.பூக்கள் நெதர்லாந்தில் அதிகம் உற்பத்தியாகிறது. அதில் 50%க்கு மேல் ஏற்றுமதி ஆகிறது. 4.வி.பி.சிங். இவர் 800க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு 2 மணி நேரம் வரை பதில் அளித்து சாதனை படைத்தார். 5.வாழ்நாளில் நீரே அருந்தாத உயிரினம் கங்காரு எலி.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என, தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு ராஜினாமா குறித்து அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இன்று மாலை இணைந்து, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 12ம் தேதி வரை 7 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
எதிர்கால சந்ததியினர் நலனுக்காக மக்கள் நீரை சேமிக்க வேண்டுமென PM மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜராத்தில் ஜல் சஞ்சய் ஜல் பகிரதி திட்டத்தை தொடங்கி வைத்து காணொலி மூலம் பேசிய அவர், நீர் சேமிப்பு என்பது வெறும் கொள்கை கிடையாது, அது ஒரு அறம் என்றார். எதிர்கால சந்ததியினர் நமது வாழ்க்கை முறையை மதிப்பிட, நீர் சேமிப்பு முறையையே முதல் அளவுகோலாக எடுப்பர் என்றும் மோடி அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.