India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகலின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (₹2,081 கோடி) முதலிடம் பிடித்துள்ளார். 1 செப். 2023 – 1 செப். 2024 காலத்தில்
ஜான் ரெஹம் – ₹1,712 கோடி, மெஸ்ஸி – ₹1,074 கோடி, லெப்ரான் – ₹990 கோடி, எம்பாப்பே – ₹881 கோடி, கியானிஸ் – ₹873 கோடி, நெய்மர்- ₹864 கோடி, பென்சிமா – ₹864 கோடி, விராட் கோலி – ₹847 கோடி, ஸ்டீபன் கரி – ₹831 கோடி ஈட்டியுள்ளனர்.
மாநாடு தொடர்பாக போலீசார் எழுப்பிய கேள்விக்கு த.வெ.க சார்பாக பதிலளிக்கப்பட்டது. விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி-யிடம் TVK சார்பாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்த போலீசார், 21 கேள்விகளை எழுப்பி விளக்கமளிக்குமாறு கட்சி நிர்வாகிகளிடம் கோரியிருந்தனர். இதனிடையே, புஸ்ஸி ஆனந்த் போலீசாரை நேரில் சந்தித்து, தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தார்.
ரெட் லைனை தாண்டக் கூடாதென்று அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை அளிப்பதை சுட்டிக்காட்டியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், தங்கள் விஷயத்தில் அமெரிக்கா கட்டுப்பாட்டை இழக்கிறதென்றும், இது அந்நாட்டுக்கு ஆபத்து எனவும் தெரிவித்தார். உக்ரைன் விவகார அணுகுமுறை மூலம், 3ஆம் உலகப் போரை தூண்டிவிட்டு, ஐரோப்பா அழிய காரணமாகி விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் 56,010 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 300 வழக்குகள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. 3,082 வழக்குகள் 20 முதல் 30 ஆண்டுகளும், 52,628 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகளாகவும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நீதிபதிகள் பற்றாக்குறையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க? கமெண்டில் சொல்லுங்க.
விஜய் நடிப்பில் நேற்று வெளியான “G.O.A.T” திரைப்படம் முதல் நாளில் ₹126.32 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. நாளை, நாளை மறுநாள் விடுமுறை வருவதால், வசூல் ₹200 கோடியை தாண்டும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன் விஜய்யின் “லியோ” முதல் நாளில் ₹148 கோடி வசூல் செய்திருந்தது.
பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்று, ஆசிய அளவில் சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக, டோக்கியாவில் நடந்த பாராலிம்பிக்கில் 2.07 மீட்டர் தாண்டியிருந்த நிலையில், தனது சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் அசைவ உணவுகளின் விலை 12% குறைந்துள்ளதாக CRISIL தெரிவித்துள்ளது. அதன் சந்தை ஆய்வறிக்கையில், 2023 ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு சைவ உணவுகளின் விலை 8% குறைந்துள்ளது. தக்காளி (51%), சமையல் எண்ணெய் (6%), எரிவாயு (27%) குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மறுபுறம், கோழிக்கறி விலை 50% குறைந்ததால், அசைவ தாலியின் விலையும் குறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக தொடருந்து போராடும் என அக்கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறியுள்ளார். தாங்கள் சாலையில் இழுத்து செல்லப்பட்ட போது பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் தங்களுக்கு ஆதரவளித்ததாக பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து போராடும் காங்கிரஸில் இணைந்ததற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
INDvsAUS இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவ.22 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. கடந்த 2 முறை ஆஸி., யில் நடந்த இத்தொடரை வென்ற இந்தியா, ஹாட்ரிக் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் ஹாட்ரிக் கனவை உடைத்து சொந்த மண்ணில் வெற்றிபெறுவோம் என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் வேகப்பந்துவீச்சு சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்
பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சுஜித் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி சில தினங்களுக்கு முன் அவரை, நவீன் பட்நாயக் கட்சியில் இருந்து நீக்கினார். தனது ராஜினாமா கடிதத்தை, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் நேரில் அளித்தார். சுஜித் குமார் நாளை பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.