News September 6, 2024

‘GOAT’ படம் பார்த்தீர்களா? ஓபிஎஸ் பதில்

image

‘GOAT’ படம் தொடர்பான கேள்விக்கு, ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய பிறகு, தான் படம் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்” என கூறியுள்ளார். இந்த படம் தொடர்பான தங்களின் கருத்தை நேற்று முதல் சில அரசியல் தலைவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், திரைப்படம் பார்ப்பதையே நிறுத்திவிட்டதாக ஓபிஎஸ் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 6, 2024

வெற்றி தோல்வியை விட தன்மானம் முக்கியம்: இபிஎஸ்

image

அதிமுகவுடன் இணைந்தால் மகிழ்ச்சி என்ற பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு இபிஎஸ் பதிலளித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு அவர் “அரசியலில் வெற்றி தோல்வி என்பது வேறு. அதைவிட தன்மானம் முக்கியம்” என்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்ததால், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அக்கட்சியுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது.

News September 6, 2024

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் இயங்காது

image

இம்மானுவேல் சேகரன் ஜெயந்தியை முன்னிட்டு, செப்.11ஆம் தேதி சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக்-ஐ மூட வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கெனவே, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2024

மகாவிஷ்ணு பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்

image

அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடந்துகொண்ட முறை தவறானது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும்படி அவர் பேசியது கடும் கண்டனத்திற்குரியது என்றும், திமுக அமைச்சர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசின் அலட்சியமே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் எனவும், இதை உடனே தடுத்து நிறுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News September 6, 2024

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

image

நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. லிட்டருக்கு ₹4 முதல் ₹6 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கச்சா எண்ணெய் பேரல் விலை 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 70 டாலருக்கு கீழ் சென்றது. J&K & ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர்களின் ஆதரவைப் பெற, விலை குறைக்கப்படலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News September 6, 2024

OFFICIAL: RR தலைமை பயிற்சியாளராக டிராவிட்

image

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் RR அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த நிலையில், அணியின் நிர்வாகம் & டிராவிட் இடையே தற்போது உடன்பாடு ஏற்பட்டது. இதனை உறுதிசெய்யும் விதமாக RR நிர்வாகியிடம் இருந்து ஜெர்சியை பெற்றார். RR அணியின் கேப்டனாகவும் (2012, 2013), வழிகாட்டியாகவும் (2014, 2015)டிராவிட் பணியாற்றினார்.

News September 6, 2024

இந்தியில் வெளியாகாத ‘G.O.A.T’

image

விஜய் நடித்துள்ள ‘G.O.A.T’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் திட்டமிட்டபடி இந்தி மொழியில் மட்டும் வெளியாகவில்லை. இந்தியில் ஒரு படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்த பின்னரே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன் காரணமாகவே ‘G.O.A.T’ படம் இந்தியில் திரையரங்குகளில் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

News September 6, 2024

ஜம்மு & காஷ்மீர் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

image

ஜம்மு & காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், 5 லட்சம் வேலை வாய்ப்புக்கள் உண்டாக்கப்படும் என்றும், ஜம்மு மற்றும் ரஜோரியை சுற்றுலா தலமாக மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக காஷ்மீரை வன்முறையற்ற மாநிலமாக மாற்றியுள்ளதாகவும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இங்கு வரும் 18ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

News September 6, 2024

கனத்த இதயத்துடன் காத்திருக்கிறேன்: கங்கனா

image

‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என கங்கனா தெரிவித்துள்ளார். “எமர்ஜென்சி படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை கனத்தை இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தணிக்கை குழுவின் சான்றிதழுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என அவர் Xஇல் பதிவிட்டுள்ளார். இந்திரா காந்தி கேரக்டரில் கங்கனா நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாவதாக இருந்தது.

News September 6, 2024

பொதுவெளியில் பலாத்காரம்.. வீடியோ எடுத்த பொதுமக்கள்

image

பரபரப்பான சாலையில் இளம்பெண்ணை ஒருவர் பலாத்காரம் செய்தபோது, யாருமே உதவிக்கு வராமல் <>வீடியோ <<>>எடுத்த சம்பவம் கதி கலங்கச் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் லோகேஷ் என்பவரை கைது செய்து விசாரித்ததில், அப்பெண்ணுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!