India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஷை மாற்ற வேண்டும் என தமிழிசை கோரியுள்ளார். தமிழக கல்வித்துறை சரியான பாதையில் செல்கிறதா? என்று கேள்வி எழுப்பிய அவர், அனைத்திற்கும் ஆசிரியர்களை பலிகடா ஆக்குவதற்கு பதிலாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாற்றப்படுவதே நல்ல முன்னுதாரணம் எனக் குறிப்பிட்டார். முன்னதாக, சர்ச்சை நபரான மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச அனுமதித்த, அரசு பள்ளி HM பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆதாரில் கட்டணமின்றி மாற்றங்களைச் செய்ய அளிக்கப்பட்ட காலக்கெடு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. கார்டுதாரர்கள் செப்.,14ஆம் தேதிக்கு முன் ஆதார் போர்ட்டலில் தங்கள் விவரங்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். <
செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் குரூப் 2 தேர்வை 7.93 லட்சம் பேர் எழுதவுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. வினாத்தாள் விநியோகம் மற்றும் தேர்வை சிக்கலின்றி நடத்துவது குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிடுவதை அம்மாநில காங்., மூத்த தலைவர் தீபக் பபாரியா உறுதி செய்துள்ளார். ஜூலானா தொகுதியில் போட்டியிட அவருக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும், தற்போது எம்.பிக்களாக உள்ள யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அக்.5இல் அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வினேஷ் போகத் இன்று காங்கிரஸில் இணைந்தார்.
மத்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 39,481 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் பணியில் சேர தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-23. ஊதிய விவரம்: ₹21,700 – ₹69,100 விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.,14. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு & நேர்காணல். கூடுதல் தகவல்களுக்கு <
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ₹20 ஆயிரத்தில் இருந்து ₹21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ₹11 ஆயிரத்தில் இருந்து ₹11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல கட்டபொம்மன், வ.உ.சி வழித்தோன்றல்களின் ஓய்வூதியமும் ₹10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
TVK மாநாட்டிற்கு குழந்தைகளுக்கு அனுமதியில்லை என போலீசாருக்கு அளித்த பதில் மனுவில் அக்கட்சி தெரிவித்துள்ளது. மாநாட்டில் 30 ஆயிரம் ஆண்கள், 15 ஆயிரம் பெண்கள், 5 ஆயிரம் முதியவர்கள், 500 மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்வார்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு உணவு, கழிவறை, குடிநீர், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேனியில் உண்டாகும் நோய்களை விரட்டும் ஆற்றல் குப்பைமேனிக்கு இருப்பதாக அகத்தியர் ரண நூல் கூறுகிறது. கிளிடோரின், அக்கலிபமைடு, சுசினிமைடு போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலைச் சாறோடு (200 ml), தேங்காய் எண்ணெய் (100 ml) சேர்த்து, நீர்பதம் வற்றும்வரை கொதிக்க வைத்து, உடலில் தடவி 15 நிமிடம் கழித்து வாரம் இருமுறை குளித்துவந்தால், சொறி, சிரங்கு போன்ற பாதிப்புகள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, வீட்டிற்கு, வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட விரோதமான கூட்டத்தில், பயங்கரமான ஆயுதங்களுடன் செல்வது அல்லது மரணத்தை விளைவிக்கத்தக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவது (Joining Unlawful Assembly Armed With Deadly Weapon) BNS சட்டப் பிரிவு 189 (4)இன் படி குற்றமாகும். இந்த குற்றத்தை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியும். இதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.