News September 7, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்டம்பர் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 7, 2024

பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா

image

பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிடும் வரை, பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு & காஷ்மீர் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், பேச்சுவார்த்தையும், வெடிகுண்டுகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியாது என கூறினார். மேலும், சிறப்பு அந்தஸ்தை இனி யாராலும் அதை திருப்பி கொண்டு வரவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

ராசி பலன்கள் (07.09.2024)

image

*மேஷம் – புகழ் உண்டாகும் *ரிஷபம் – திறமை வெளிப்படும் *மிதுனம் – சிரமத்தை சந்திப்பீர் *கடகம் – நஷ்டம் ஏற்படும் *சிம்மம் – கவலை ஏற்படும் *கன்னி – காதல் கைகூடும் *துலாம் – நட்புறவு உண்டாகும் *விருச்சிகம் – பாசப் பிணைப்பு ஏற்படும் *தனுசு – வெற்றி அடைவீர் *மகரம் – ஓய்வு கிடைக்கும் *கும்பம் – அமைதி நிலவும் *மீனம் – மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

News September 6, 2024

வினேஷ் போகத்துக்கு MLA சீட், பஜ்ரங் புனியாவுக்கு கட்சி பதவி

image

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது. அக்.5இல் அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான 31 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ், வினேஷ் போகத்துக்கு ஜூலானா தொகுதியில் சீட் வழங்கியுள்ளது. காங்கிரஸில் இன்று மாலையில் சேர்ந்த வினேஷ் போகத்துக்கு எம்எல்ஏ சீட்டும், பஜ்ரங் புனியாவுக்கு கட்சி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

இலக்கைத் துல்லியமாக தாக்கிய அக்னி-4 ஏவுகணை!

image

இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள சோதனைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என்றும், DRDO மேற்கொண்ட பரிசோதனையில், அதன் செயல்பாடு & தொழில்நுட்ப அளவுருக்கள் சரிபார்க்கப்பட்டது எனவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

News September 6, 2024

இவர்தான் 100% சொக்கத்தங்கம்

image

பாலியல் புகார் சர்ச்சை பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், “ எனக்கு தெரிந்து 100% ஜென்டில்மேன் என்றால் அது டி.ராஜேந்தர் சார் மட்டும் தான்” என்று நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார். இது சினிமால இருக்க எல்லோருக்கும் தெரியும். இதை சொல்வதால், யாரும் என்ன திட்ட கூட மாட்டாங்க. மதிப்பு, மரியாதை போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல், யோக்கியன் என்று சொனால் நான் டி.ஆர். என்று தான் சொல்வேன் என தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

நாளை மதியம் 1.10 மணிக்கு வருகிறேன்: மகாவிஷ்ணு

image

பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு, ஆஸ்திரேலியாவில் இருந்து விளக்கமளித்துள்ளார். எங்கும் ஓடி ஒளியக் கூடிய வகையில் என்ன தவறான கருத்தை நான் சொல்லிவிட்டேன்?. நாளை மதியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறேன். அப்போது, சர்ச்சை தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

அறிவியலுக்கு ஒவ்வாத கருத்தை ஏற்க முடியாது: திருமா

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். பள்ளிகளில் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களை ஆளுநர் முதல் சாதாரண மனிதன் வரை யார் பேசினாலும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை அசோக் நகர் பள்ளியில் சர்ச்சை பிரமுகரான மகாவிஷ்ணுவின் பேச்சை ஏற்க முடியாது எனவும், அதை VCK வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

அதிவேகமாக சதம் அடித்த ஜோஷ் இங்லிஷ்

image

சர்வதேச T20இல் அதிவேகமாக சதம் அடித்த ஆஸி., பேட்ஸ்மேன் என்ற பெருமையை வீரர் ஜோஷ் இங்லிஷ் பெற்றுள்ளார். SCO-க்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், 43 பந்துகளில் (7 சிக்ஸர், 7 பவுண்டரி) ஜோஷ் 103 ரன்களை எடுத்துள்ளார். T20இல் அதிவேக சதமடித்த ஆஸி வீரர்களின் விவரம் இதோ: *47 பந்துகளில் ஆரோன் ஃபிஞ்ச் (2013 Vs ENG), ஜோஷ் இங்லிஷ் (2023 Vs IND), மேக்ஸ்வெல் (2023 Vs IND) *49 பந்துகளில் மேக்ஸ்வெல் (2016 Vs SL)

News September 6, 2024

தமிழகம் முழுவதும் உஷார்….

image

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் 67,217 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். சிலைகள் நிறுவதல், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், அமைதியை பராமரிக்க, பதற்றமான இடங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீசாருக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!