India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் F57 குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஹொகடோ ஹொடொஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். 14.65மீ தூரம் குண்டு எறிந்து தனது சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஈரான் வீரர் யாஷின் 15.96மீ எறிந்து முதல் இடமும், பிரேசில் வீரர் தியாகோ 15.06மீ என்ற அளவில் 2ஆம் இடமும் பிடித்தனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா கைப்பற்றிய பதக்கங்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
*உங்கள் எதிரிகளை நேசியுங்கள், அவர்கள் தான் உங்களில் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டுவருகிறார்கள். *இந்த உலகில் 2 வகையான மக்கள் உள்ளனர், தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் நம்ப விரும்புபவர்கள். *இந்த உலகம் அழகானது, ஆனால் அதற்கு மனிதன் என்று ஒரு நோய் உள்ளது. *சிறந்த விடயங்கள் அனைத்தும் முதலில் சாத்தியமற்றதாகவே தோன்றும். *எல்லா நேரத்திலும் புகழப்பட வேண்டும் என்று விரும்பும் கடவுளை நம்ப முடியாது.
இத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலையில், SEBI தலைவர் மாதபி மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ஏன் பயப்படுகிறார் என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியை உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரிடம் தான் கேட்க முடியும் என்றும், நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை ஆதாரங்கள் தேவைப்படுகின்றன எனவும் அவர் வினவியுள்ளார். மேலும், 10 கோடி இந்தியர்கள் இதில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் தமிழ் இயக்குநர் ஒருவரது செக்ஸ் அடிமையாக இருந்ததாக நடிகை சௌமியா வேதனை தெரிவித்துள்ளார். கல்லூரி படிக்கும் போது தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்படத்தின் இயக்குநர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த அவமான உணர்வில் இருந்து வெளிவர 30 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி இயக்குநரின் பெயரை பகிர நடிகை மறுத்துவிட்டார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: இல்வாழ்க்கை ▶குறள் எண்: 46 ▶குறள்: அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன். ▶பொருள்: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற வீரர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, வீரர்கள் வென்ற பதக்கங்கள் நாட்டிற்கான சிறந்த பெரிய பரிசாக அமைவதாக பாராட்டியுள்ளார். வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாகவும், பயிற்சியாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் இதுவரை 26 பதக்கங்களை வென்றுள்ளனர்.
Swiggy நிறுவனத்தில் முன்னாள் ஊழியர் ஒருவர் ₹33 கோடியை திருடிச் சென்றுள்ளதாக அந்நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட ரீதியாக புகார் அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், அந்நிறுவனத்தின் வருமானம் கடந்த காலங்களை விட 36% அதாவது ₹11,247 கோடியாக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
▶செப்டம்பர்-7 (ஆவணி 22) ▶சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 07:45-08:45 AM & 04:30-05:30 PM ▶கெளரி நேரம்: 10:45-11:45 AM & 09:30-10:30 PM ▶ராகு காலம்: 09:30-10:30 AM ▶எமகண்டம்: 01:30-03:00 PM ▶குளிகை: 06:00-07:30 AM ▶திதி: சதுர்த்தி ▶நட்சத்திரம்: சித்திரை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶யோகம்: மரண, சித்த யோகம் ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி.
‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், இக்காட்சிகள் தனக்கு அனுப்பப்படுவதாக கூறிய அவரது மகன் விஜய பிரபாகரன், அதை பார்க்கும் போது புல்லரிப்பதாக தெரிவித்துள்ளார். படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து இருப்பதாகவும், ஆனால் நேரம் கிடைக்காததால் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாளைக்குள் படத்தை பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.