News October 25, 2024

இந்த நோய்கள் இருக்கிறதா? பக்தர்களுக்கு எச்சரிக்கை

image

கீழ் திருப்பதியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளது. முதியோர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பாதிப்புள்ளவர்கள் பாதயாத்திரையாக வரவேண்டாம். உடல் பருமன் உள்ளவர்கள், இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள் திருமலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News October 25, 2024

தொப்புள் கொடியை எப்போது வெட்டுவார்கள்?

image

குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடி வெட்டப்படுவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தை வெளிவந்தவுடன் தாயின் வயிற்றின் மேலோ, மார்பகங்களுக்கு இடையிலோ வைத்திருக்க செய்யும் ‘கங்காரு மதர் கேர்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையின் அழுகை, இதயத்துடிப்பு எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் தொப்புள் கொடி வெட்டப்படும். அதுவரை தாயின் ரத்தம் மூலமே குழந்தையின் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் என்கிறார்கள்.

News October 25, 2024

அப்பாவுக்கு எதிரான வழக்கு ரத்து

image

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின் 40 அதிமுக MLAக்கள் திமுகவில் சேர விரும்பியதாக அப்பாவு கூறியதற்கு எதிராக அதிமுகவின் பாபு முருகவேல் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, தனிப்பட்ட முறையில் புகார்தாரர் வழக்கை தாக்கல் செய்துள்ளார். கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் தரவில்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்தார்.

News October 25, 2024

தட்டி தூக்கிய ஸ்பின்னர்கள்

image

இந்தியா – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்டில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. இதில் மொத்தம் 19 விக்கெட்டுகள் ஸ்பின்னர்களால் வீழ்த்தப்பட்டன. இது இந்தியாவில் ஸ்பின்னர்கள் வீழ்த்தும் இரண்டாவது அதிகபட்சமாகும். முன்னதாக 1952ல் கான்பூரில் நடைபெற்ற IND-ENG இடையேயான டெஸ்டில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்பின்னர்கள் மட்டுமே 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

News October 25, 2024

தவெக மாநாட்டில் வரலாற்று நாயகர்கள்

image

தவெக மாநாட்டில் 10 தமிழ் வரலாற்று வீரர்களின் படங்கள் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழகு முத்துக்கோன், வேலு நாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், தீரன் சின்னமலை, பூலித்தேவர், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் ஆகியோரின் படங்கள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

News October 25, 2024

வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்த டாடா..!

image

ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவிற்கு உயில் எழுதி வைத்துச் சென்றுள்ளார். இந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாயை, வாழ்நாள் முழுவதும் பராமரிக்கும் பொறுப்பை தனது சமையல்காரர் ராஜன் ஷாவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன் இந்த நாயை டாடா தத்தெடுத்தார். மேலும், சமையல்காரர் ராஜன் ஷா மற்றும் 30 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த சுப்பையாவிற்கும் உயிலில் சொத்து எழுதி வைத்துள்ளார்.

News October 25, 2024

பதவி விலகுவாரா உதயநிதி ஸ்டாலின்?

image

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதற்கு CM என்ன பதில் கூறப்போகிறார் என்றும், இதற்கு பொறுப்பேற்று உதயநிதி பதவி விலகுவாரா எனவும் கேள்வி எழுப்பினார். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பிரச்னையாக்கி அரசியல் செய்ததை தந்தையும், மகனும் இப்போதாவது உணர வேண்டும் எனச் சாடினார்.

News October 25, 2024

நியூசிலாந்து நிதான ஆட்டம்

image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் தற்போது வரை நியூசிலாந்து 85/2 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் கான்வே 17, வில் யங் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். லாதம் 37*, ரச்சின் 7* ரன்களுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் நியூசி., 259, இந்தியா 156 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது வரை நியூசி., இந்தியாவைவிட 188 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

News October 25, 2024

இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

image

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உறுப்பு சேதம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உணவகங்களில் 60% அளவுக்கு, பயன்படுத்திய எண்ணெயையே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. வட இந்திய நகரங்களை ஒப்பிடுகையில் சென்னை பரவாயில்லையாம். வடை, பஜ்ஜி, சமோசா, சில்லிசிக்கன் சாப்பிடுமுன் யோசிங்க, Pls!

News October 25, 2024

Dilli will return soon… லோகேஷ் கனகராஜ் பதிவு

image

டில்லி விரைவில் திரும்பி வருவார் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ‘கைதி’ திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்துள்ள அவர், படப்பிடிப்பு தொடங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்து, நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். விஜய்யின் ’பிகில்’ படத்துடன் மோதிய இப்படம், அடுத்தடுத்த நாள்களில் வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தின் 2ஆம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.

error: Content is protected !!