India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கங்குவா 2’-ஆம் பாகத்திற்கான பணிகள் 2026-ல் முடிவடைந்து 2027-ல் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இயக்குநர் முதலில் 2 பாகங்களாக எடுக்க திட்டமிட்டதாகவும், ஆனால் தற்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான பின் கதையை கூறி Web Series-க்கான ஐடியாக்களை கூறிவருவதையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், முதல் பாகத்தின் பெரும்பகுதி ரத்தமும், சண்டையுமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் மிக குறைந்த வயதில் (22) டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு வரை இந்த சாதனையை திலீப் வெங்சர்க்கார் (23 வயது, வருடம் 1979) தன்வசம் வைத்திருந்தார். 45 ஆண்டுகளுக்கு பின் அவரது சாதனையை முறியடித்துள்ளார் ஜெய்ஸ்வால்.
தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சி.வி. சண்முகத்தை
போலீசார் கைது செய்தனர்.
உதயநிதி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாகக் கூறி இனவாத கருத்தை முன்வைத்த திமுக, இதற்கு என்ன பதில் கூறப்போகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல இதனை கடந்து செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்த தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள், தேசிய போட்டிகளில் பங்கேற்றால் ₹25,000, சர்வதேச போட்டிகளுக்கு ₹50,000 நிதியுதவி வழங்குகிறது. பங்கேற்கும் ஆண்டில் மட்டும் ஒரு முறை அந்த நிதி வழங்கப்படும். இதற்கு, அரசு அங்கீகரித்த 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவால் 35 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததால் பள்ளியின் 3ஆவது தளத்தில் இருந்த மாணவர்கள் ஒவ்வொருவராக மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர். இதனையடுத்து, அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
AI மீதான காதலில் USA-வின் 14 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Game of Thrones சீரிஸில் வரும் Daenerys Targaryen கதாபாத்திரத்தை ChatGPT-யின் AI-ல் உருவாக்கி அதனுடன் சிறுவன் சாட்டிங் செய்து வந்துள்ளான். AI மீதான காதலில் நிஜ உலகை வெறுத்த சிறுவன், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். ChatGPT மீது சிறுவனின் தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தாயார் வாங்கிய கடனை அடைக்கவே தான் நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தந்தை சிவக்குமார், 10 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்ததாகவும், அதுவரை நடிக்கும் எண்ணமே தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு நடிகரின் மகனாக தனக்கு பல வாய்ப்புகள் வந்ததாகவும், அப்படி மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்ப்புதான், சூர்யாவாக மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கீழ் திருப்பதியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளது. முதியோர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பாதிப்புள்ளவர்கள் பாதயாத்திரையாக வரவேண்டாம். உடல் பருமன் உள்ளவர்கள், இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள் திருமலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல எனவும் அறிவுறுத்தியுள்ளது.
குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடி வெட்டப்படுவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தை வெளிவந்தவுடன் தாயின் வயிற்றின் மேலோ, மார்பகங்களுக்கு இடையிலோ வைத்திருக்க செய்யும் ‘கங்காரு மதர் கேர்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையின் அழுகை, இதயத்துடிப்பு எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் தொப்புள் கொடி வெட்டப்படும். அதுவரை தாயின் ரத்தம் மூலமே குழந்தையின் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் என்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.