India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சம்பா கோதுமையை கழுவி, 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் போட்டு அரைத்து, பின் அதை பிழிந்து பாலெடுக்கவும். அதிலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை எடுத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். கொதி வந்ததும், அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும். அத்துடன், சிறுக சிறுக நெய் சேர்த்து இடைவிடாது கிளறவும். பதம் வந்ததும் ஏலக்காய் தூள், முந்திரி போட்டு இறக்கி ஆறவைத்தால் அல்வா ரெடி.
IPL 2020ல் தன்னால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலியா வீரர் கிளென் மேக்ஸ்வெல் வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது தான் மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவர் தனது ‘தி ஷோமேன்’ புத்தகத்தில் தெரிவித்துள்ளார். IPL முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்காக ஆடியபோது முதல் சிக்ஸர் அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து PBKS கேப்டனாக இருந்த KL ராகுலிடம் போனில் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
துணை முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் நிகழ்ந்த பிழையை அரசியலாக்க வேண்டாம் என அன்புமணி கேட்டுக்கொண்டார். ஆளுநர் மற்றும் உதயநிதி நிகழ்ச்சிகளில் நடந்த பிழைகள் மனித பிழைகள்தான். ஆனால் ஆளுநர் விவகாரத்திற்கு மட்டும் சிலர் உள்நோக்கம் கற்பித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், DD தமிழ் சேனல் மன்னிப்பு கேட்டதை போல், அரசு துறையும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளார்.
தீபாவளிக்கு முந்தைய நாளான அக்.30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் குருபூஜை வருகிறது. தென் மாவட்டங்களில் முக்கிய நிகழ்வான அன்று சிவகங்கை மாவட்டத்தில் ( சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில்) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகவுள்ளது.
NLC நிறுவனத்தில் காலியாகவுள்ள 1,013 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trade Apprentice, Technician Apprentice, Degree Apprentice உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ITI, Diploma, D.Pharm & Any UG Degree. வயது வரம்பு: 18-27. உதவித்தொகை: ₹8,766 – ₹12,524. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.6. கூடுதல் விவரங்களுக்கு <
தலை வெட்டப்பட்ட கோழி, 2 ஆண்டு உயிருடன் இருந்த சுவாரஸ்ய நிகழ்வு உங்களுக்கு தெரியுமா? USA விவசாயி லாயிட் ஒல்சன், 1945இல் ஒரு கோழியின் கழுத்தை வெட்டியுள்ளார். ஆனாலும், அது உயிருடன் இருக்க, ஒரு பெட்டியில் போட்டு கண் சொட்டு மருந்து போன்றவற்றை உணவாக வழங்கியுள்ளார். பிறகு 1947இல் அந்தக் கோழி உயிரிழந்தது. கோழிகளின் மூளை, தலையின் பின்பகுதியில் உள்ளதால், கழுத்து வெட்டப்பட்டும் கோழி உயிருடன் இருந்துள்ளது.
ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் பதிலளிக்க இபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குடன் திமுகவுக்கு தொடர்பு உள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்கும்படி இபிஎஸ்-க்கு உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் சிறப்புக் காட்சி, ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்டது. டெல்லியில் உள்ள திரையரங்கில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், ராணுவ வீரர்களுடன் இணைந்து SK மற்றும் சாய்பல்லவி படத்தை பார்த்து மகிழ்ந்தனர். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 8,932 பணியிடங்களுக்கு ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 15.8 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவு அக்டோபரில் வெளியாகும் என முன்பு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அக்.28இல் நடைபெறும் TNPSC நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெக மாநாட்டுக்கு, அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு இடையூறும் ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள பாஜக, புதிய அரசியல் பாதையை உருவாக்கி, முன்மாதிரி கட்சியாக TVK விளங்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.