India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா, தெ.ஆப்பிரிக்கா இடையேயான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நவ.8இல் டர்பனில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன், அபிசேக், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சார் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், விஜயகுமார் வைசாக், ஆவேஷ் கான், யாஷ் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லியில் பாத யாத்திரை சென்றபோது கெஜ்ரிவால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. விகாஸ்புரியில் கெஜ்ரிவால் பாத யாத்திரை சென்றபோது திடீரென புகுந்த கும்பல் ஒன்று அவரை தாக்கியதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு கெஜ்ரிவாலை கொல்ல பாஜக முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22இல் பெர்த்தில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்சித் ரானாவுக்கு முதல்தடவையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ருதுராஜூக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பும்ரா துணை கேப்டனாக நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டி.வி பயன்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம். தூக்கம் வர வேறு ஏதேனும் யோசனை இருக்கா?
➤மேஷம் – புகழ்
➤ரிஷபம் – இன்பம்
➤மிதுனம் – உதவி
➤கடகம் – பொறுமை
➤சிம்மம் – பாராட்டு
➤கன்னி – ஏமாற்றம்
➤துலாம் – வெற்றி
➤விருச்சிகம் – சோதனை
➤தனுசு – அலைச்சல் ➤மகரம்- மேன்மை
➤கும்பம் – சுபம் ➤மீனம் – நன்மை
ஆங்கிலேயர் ஆட்சியில் மாத சம்பளம் 4 வாரங்களுக்கு கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 4 வாரங்களுக்கான 28 நாட்களை கழித்துவிட்டுப் பார்த்தால், வருட முடிவில் கிட்டதட்ட 30 நாட்கள் சம்பளமே இல்லாமல் வேலை பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து, பணியாளர்கள் 10 வருடங்கள் போராடி, விடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை போனஸாக, 1940 ஜூனிலிருந்து பெற ஆரம்பித்தனர்.
T20 Emerging Teams Asia Cup: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதியில் India A படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 206 ரன்கள் குவித்துள்ளது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 186 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ரமன்தீப் சிங் மட்டும் 64 ரன்கள் எடுத்தனர்.
பிகாரில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆட்சியில் எந்த வேறுபாடுமில்லை என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிசோர் விமர்சித்துள்ளார். லாலு பிரசாத் ஆட்சியில் கிரிமினல்கள் துப்பாக்கியை காட்டி மக்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும், நிதிஷ் ஆட்சியில் அதிகாரிகள் கொள்ளையடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். நிதிஷ் ஆட்சியில் பிகாரில் அதிகாரிகளின் காட்டாட்சி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும் “நூல் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், திராவிடம் என்று சொன்னால் சிலருக்கு எரியுமென்றால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக திமுகவின் பணி தொடரும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி (ITI) நிலையங்களில் 2024-2025ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அக்.30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. விருப்பமுள்ள மாணவர்கள் www.skiltraining.In.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.