India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை ரஷ்மிகா சமீபத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சமீப நாள்களாக தான் ஆக்டிவாக இல்லாமல் இருந்ததற்கு விபத்துதான் காரணம் என்றும், மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது சிறிய விபத்துதான் என்றும், தற்போது குணமடைந்து வருவதாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார். ரஷ்மிகா விரைவில் நலம்பெற ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சிறையில் அவர் ஜாலியாக வலம்வந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தர்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் செப்.12 வரை காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இலங்கை வெற்றியை பதிவுசெய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 -10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.19 முதல் 27ஆம் தேதி வரையும் காலாண்டுத் தேர்வு நடைபெறும். எனவே, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள் சமீபகாலமாக விவாகரத்து செய்வது அதிகரித்து வருவதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனுஷ் – ஐஸ்வர்யா, டி.இமான் – மோனிகா ரிச்சர்ட், ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி, விஷ்ணு விஷால் – ரஜினி, இயக்குநர் பாலா – மலர், நாக சைதன்யா – சமந்தா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து, தற்போது ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
டெல்லியில் 2025 ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசுக்களை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆன்லைனிலும் பட்டாசுகளை விநியோகிக்க அரசு தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரத்தத்தில் சுண்ணச் சத்தின் (கால்சியம்) அளவை முறைப்படுத்தும் ஆற்றல் பிரண்டைக்கு உள்ளதென தேரையர் காப்பியம் கூறுகிறது. சைடோஸ்டீரால், இரிடாய்ட்ஸ், குவர்சிடின், கரோட்டின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதில் இருந்து எடுக்கப்படும் உப்புடன் (2கி) ஜாதிக்காய்த்தூள் (5கி) சேர்த்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், முதுகுவலி, இடுப்புவலி தீரும்; எலும்பு வலுவாகும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரவி சாஸ்திரியின் ஆலோசனையால் தான், ஆஃப் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். ஒரு காலத்தில், ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஷாட்டுகளை அடிக்கும்போது அவுட்டாகி விடுவேன் எனக் குறிப்பிட்ட அவர், அப்போது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை ஆடுமாறு ரவி சாஸ்திரி யோசனை வழங்கியதாக தெரிவித்தார். மேலும், ஆஃப் ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ளவும் அவர் ஐடியா வழங்கியதாக பண்ட் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி இருப்பதாக நேற்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகே கடத்தல் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால், இதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.