India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிலருக்கு பற்களில் மஞ்சள் கறை இருக்கும். எவ்வளவு பல் தேய்த்தாலும் அது போகாது. மேலும் சிலருக்கு பாக்கு, சிகரெட் பழக்கத்தால் பற்களில் கறுப்பு நிறத்தில் கறை இருக்கும். இவர்களுக்கான சூப்பர் டிப்ஸ்: எலுமிச்சை பழத்தை கழுவி, அதன் தோலை கேரட் துருவுவதை போல நன்றாக துருவி எடுக்க வேண்டும். பின்னர் அதில் நக அளவு மஞ்சள் தூளும், சிறிது தேங்காய் எண்ணெய்யும் கலந்து பல் தேய்த்தால் பல் வெள்ளையாக மின்னும்.
தவெக முதல் மாநாடு செப்.23ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தவெக மாநாடு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு விஜய பிரபாகரன் பதிலளித்துள்ளார். “மதுரையில் 2005இல் விஜயகாந்த் நடத்திய மாநாட்டிற்கு 35 லட்சம் பேர் வந்திருந்தனர். அந்த அளவிற்கு வெற்றிகரமான மாநாடு அதற்குப்பின் நடந்தது இல்லை. தவெக மாநாடு நடந்தபின் அது குறித்து பேசலாம்” என கூறியுள்ளார்.
எந்தெந்த கோள்களில் மனிதன் எத்தனை நாட்கள் வாழ முடியும் தெரியுமா? புதன்: காற்று கிடையாது. 2 நிமிடங்களில் உயிர் போய்விடும். வெள்ளி: அதீத வெப்பம். 5 நொடி. நிலவு: ஆக்சிஜன் கிடையாது. 3 நிமிடங்கள். செவ்வாய்: ஈர்ப்பு விசை கிடையாது. 3 நிமிடங்கள். வியாழன்: காற்றழுத்தம் அதிகம். ஒரு நொடி. சனி: 2 நிமிடங்கள். யுரேனஸ் மற்றும் நெப்டியூன்: திடப் பரப்பு இல்லாததால் இங்கு தரையிறங்கவே முடியாது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: இல்வாழ்க்கை ▶குறள் எண்: 49 ▶குறள்: அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. ▶பொருள்: அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
ஒருகாலத்தில் மாட்டு வண்டியில்தான் மக்கள் பயணித்தார்கள். அப்படி அந்த வண்டிகள் காடுகளை கடக்கும் போது புலி, சிறுத்தை போன்றவை தாக்கிவிடும். இரவில் இந்த மிருகங்களின் கண்கள் தீ போல ஜொலிக்கும். பூனையின் கண்களும் இதுபோலவே இருக்கும். எனவே இரவில் இப்படி கண்கள் தெரிந்தால், பூனையோ, புலியோ, சிறிது நேரம் நின்று செல்வது வழக்கம். இதைதான், பூனை குறுக்கே சென்றால் அபசகுணம் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.
சிறுநீரக பாதிப்பை நமது உடலில் ஏற்படும் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.
*எப்போதும் சோர்வாக இருப்பது, போதுமான உறக்கம் இல்லாதது.
*வறண்ட சருமம், பாதங்கள் வீங்குவது, கண்களைச் சுற்றி வீக்கம்.
*தசைகளில் வலி, சுவாசிப்பதில் சிக்கல், சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம்.
*வாந்தி, வயிற்று வலி, அரிப்பு, குழப்பம், மாயை மற்றும் உணவின் உலோக சுவை. #SHARE NOW.
பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவராக எச். ராஜா பொறுப்பேற்றதிலிருந்து அவரது பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக அடிக்கடி கூறும் பெரியார் மண்ணில்தான் இன்று விநாயகர் சிலைகளை செய்துள்ளோம். விநாயகர் சதுர்த்திக்காக கோவைக்கு அனுப்பப்பட்ட விநாயகர் சிலைகள் இன்னும் வந்து சேரவில்லை. தமிழகத்தில் நடப்பது இந்து விரோத அரசு” என சாடினார்.
இந்தியை பாஜக அரசு திணிப்பதாக அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, “தாய்நாட்டை ராகுல் இழிவுப்படுத்தியுள்ளார். இந்திரா காந்தியின் முதல் தேசிய கல்விக் கொள்கையில் கட்டாய பாடமாக இந்தி இருந்தது. ஆனால், மோடியின் புதிய தேசிய கல்விக் கொள்கையிலோ, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது சொல்லுங்கள். இந்தியை திணித்தது யார்?” எனக் கேள்வியெழுப்பினார்.
இன்று (செப். 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (செப். 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.