News September 10, 2024

செவ்வாய் தோஷம் போக்கும் விரதம்

image

செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும் என ஆன்மிகம் கூறுகிறது. அதாவது, அங்காரகரின் பக்தித் திறத்தை மெச்சிய விநாயகர் அவர் வேண்டிக் கொண்டபடி நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேற்றினை அளித்ததாகவும், இதனால், அங்காரகனுக்குரிய செவ்வாயில் வரும் சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் தோஷம் விலகும் என்று கூறப்படுகிறது. SHARE IT

News September 10, 2024

மாஸாக அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ்

image

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸ் போன்களை உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. USஇல் குறைந்தபட்சமாக ஐபோன் 16 மாடல் ₹67,000க்கும், அதிகபட்சமாக ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ₹1 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் AI தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

News September 10, 2024

GST கூட்டத்துக்கு TN அமைச்சர் செல்லாதது ஏன்? ADMK

image

GST கவுன்சில் கூட்டத்துக்கு தமிழக நிதியமைச்சர் செல்லாதது ஏன் என்று ADMK கேள்வியெழுப்பி உள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், டெல்லியில் நேற்று நடைபெற்ற 54ஆவது GST கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பங்கேற்காதது ஏன்? என கேள்வியெழுப்பி உள்ளார். பாஜகவை பார்த்து தமிழக நலன் குறித்து கேட்க பயமா, இல்லை என்ன கேட்க வேண்டும் எனத் தெரியவில்லையா? என்று வினவியுள்ளார்.

News September 10, 2024

G-PAY பயன்படுத்துவோருக்கு போலீஸ் வார்னிங்

image

G-PAYஇல் புதுவகை மோசடி நடப்பதால் கவனமாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையில், மர்ம நபர்கள் G-PAY கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு, தவறுதலாக அனுப்பியதாகக் கூறி திருப்பி அனுப்பும்படி கேட்பார்கள். இதை நம்பி அனுப்பினால் G-PAY கணக்கு ஹேக் செய்யப்படும் எனக் கூறியுள்ளது. மர்ம நபர்களை காவல்நிலையம் வந்து பணம் பெற அறிவுறுத்தவும் போலீஸ் கேட்டுள்ளது.

News September 10, 2024

காங். பொது செயலாளர் பதவி : தமிழக தலைவர்கள் குறி?

image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை பிடிக்கும் முயற்சியில் தமிழக தலைவர்கள் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பலருக்கு அப்பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழக தலைவர்கள் ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியில் அக்கட்சியினர் உள்ளனர். எனினும், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அந்த பதவிக்கு முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

News September 10, 2024

ADMK மீது மக்களுக்கு இன்னும் சந்தேகம் : கி. வீரமணி

image

பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்தாலும் கூட ADMK மீது மக்களுக்கு இன்னும் சந்தேகம் உள்ளதாக தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். ADMK-வும் ஒரு திராவிட கட்சிதான் என்று கூறிய அவர், இதுபோல எதிர்க்கட்சியும் திராவிட கட்சியாக இருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும் குறிப்பிட்டார். கொள்கையை நிறுத்தி செயல்பட்டால், ADMK-வுக்கு நல்லது, இல்லையேல் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்றும் அவர் கூறினார்.

News September 10, 2024

இன்று இடி – மின்னலுடன் மழை கொட்டும்

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 15ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இன்று பொதுவாக வானம் மேக மூட்டமாக இருக்கும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. SHARE IT

News September 10, 2024

வருமான வரித்துறையில் வேலை..! சம்பளம் ₹ 56,900

image

மத்திய அரசின் வருமான வரித்துறையில் Canteen Attendant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு. வயது வரம்பு: 18 முதல் 25. தேர்வு முறை: எழுத்து தேர்வு & நேர்முகத்தேர்வு. செப்.8 முதல் செப். 22 வரை விண்ணிப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள்: 06.10.2024. தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள: https://www.tnincometax.gov.in/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.

News September 10, 2024

நன்மைகளை அள்ளித் தரும் பைரவர் வழிபாடு!

image

சிவப்பெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவர் பைரவர். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் நல்லது. பைரவரை வழிபட சில வழிமுறைகள் இருக்கின்றன. மிளகை வெள்ளை துணியில் சிறிய முடிச்சாக கட்டி, அதை அகல் விளக்கில் வைத்து, நல்லெண்ணெய் விட்டு பைரவர் முன்பு தீபமாக ஏற்றினால், கேட்டவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

News September 10, 2024

அது நாங்கள் அல்ல: கமல் நிறுவனம் அறிவிப்பு

image

கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்நிலையில், இந்த நிறுவனம் புதிய படங்களை தயாரிக்கவுள்ளதாகவும், இதில் நடிக்க விரும்புவோர் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி சிலர் வலைதளங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வழங்குவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!