News September 10, 2024

அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிப்பவரா?

image

தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருப்பதால், அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக சுமார் 2,500 பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அந்த போக்குவரத்து கழகங்கள் குறித்து பாெதுமக்கள் தங்கள் கருத்துகளை ptcsoffice2023@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

News September 10, 2024

அதிமுகவுக்கு விசிக அழைப்பு

image

மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வரும்படி அதிமுகவுக்கு விசிக திடீர் அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் இன்று பேட்டியளித்த திருமாவளவன், இந்த அழைப்பை விடுத்தார். மேலும், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்த சக்திகளோடும் விசிக கைகோர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கும் நிலையில், திடீரென அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 10, 2024

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் திடுக்கிடும் தகவல்

image

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட ஜன.22இல் பெங்களூரு BJP அலுவலகத்தை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததும், அது தோல்வியில் முடிந்ததால் மார்ச் 1இல் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாகவும் போலீசார் அதில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் 4 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர்.

News September 10, 2024

Motors News: ஆகஸ்டில் அதிகம் விற்பனையான SUV கார்கள்

image

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் விற்பனையான SUV வகை கார்களில், 19,190 Brezza கார்களை விற்று மாருதி சுசூகி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் SUV பிரிவின் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 55%ஆக இருந்துள்ளது. அதிகளவு விற்பனையான டாப் SUV வகை கார்கள் குறித்த விவரம் இதோ:- *ஹூண்டாய் – Creta 16,762 *டாடா – Punch 15,643 *மஹிந்திரா – Scorpio 13,787 *மாருதி சுசூகி – Fronx 12,387

News September 10, 2024

Recipe: தினைமாவு உருண்டை

image

வாணலியில் தினை அரிசியை லேசாக வறுத்து, சலித்து எடுக்கவும். அதை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து, பொடித்த பனை வெல்லம், ஏலக்காய், முந்திரி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் வறுத்து எடுத்த தேங்காய் பூ துருவல் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு கையில் சிறிது நெய் தடவி, இந்த மாவை சின்ன உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான தினைமாவு உருண்டை ரெடி.

News September 10, 2024

ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிப்பு

image

ராஜஸ்தான் அருகே ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் அருகே சுமார் 70 கிலோ எடையுடைய 2 கான்கிரீட் கற்களை தண்டவாளத்தில் மர்ம நபர்கள் வைத்துள்ளனர். இது தொடர்பாக வந்த தகவலை அடுத்து ரயில்வே ஊழியர்கள் அவற்றை அகற்றினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. உ.பி.யில் கான்பூர் அருகே நேற்று தண்டவாளத்தில் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 10, 2024

ஆசிரியர்களை தமிழக அரசு ஏமாற்றி விட்டது: பாமக

image

பேச்சுவார்த்தை என்ற பெயரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தமிழக அரசு ஏமாற்றி விட்டதாக டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். எதிர்காலத் தலைமுறையினரை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கும் ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளார்.

News September 10, 2024

அகில இந்திய ஒதுக்கீடு: 75% MBBS இடங்கள் நிரம்பவில்லை

image

தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 75% MBBS இடங்கள் நிரம்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 771 இடங்களில் 175 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. தனியார் கல்லூரிகளில் மொத்தமுள்ள 3,550 இடங்களில் 2,285 இடங்கள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக 36% மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது.

News September 10, 2024

ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டை விற்ற கங்கனா

image

நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை ₹32 கோடிக்கு விற்றுள்ளார். 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன. இந்த பங்களாவை 2017ம் ஆண்டு ரூ.20 கோடிக்கு வாங்கியிருந்தார். அவர் நடித்த கடைசி சில படங்கள் தோல்வி அடைந்ததால், ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக அவர் வீட்டை விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News September 10, 2024

ஓணத்தை முன்னிட்டு சபரிமலை கோயில் திறப்பு

image

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்நிலையில், வரும் 15ஆம் தேதி திருவோணம் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடையை திறக்க உள்ளார். சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15, 16 ஆகிய தேதிகளில் ஓணம் விருந்து (சத்யா) வழங்கப்படும்.

error: Content is protected !!