News September 10, 2024

சசிதரூருக்கு எதிரான வழக்கில் இடைக்காலத் தடை

image

PM மோடியை விமர்சித்ததாக காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிவலிங்கம் மீதிருக்கும் தேள் என்று மாேடியை சசிதரூர் விமர்சித்ததாக பாஜக நிர்வாகி ராஜீவ் பாப்பர் வழக்குத் தொடுத்தார். இதன்மீது கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதை எதிர்த்து சசிதரூர் தொடுத்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

News September 10, 2024

சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்

image

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. சுவாச குழாய் பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், அவருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 10, 2024

7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று முதல் 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. SHARE IT

News September 10, 2024

சைபர் கமாண்டோ படைப்பிரிவு: அமித்ஷா தகவல்

image

சைபர் கமாண்டோ படைப்பிரிவு எனும் புதிய பிரிவை இந்தியா ஏற்படுத்த இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சைபர் பாதுகாப்பு என்பது உள்நாட்டு பாதுகாப்பின் ஒரு அங்கம்தான் என்றும், சைபர் பாதுகாப்பை உறுதி செய்யாமல் ஒரு நாடால் வளர்ச்சியடைய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். சைபர் குற்றங்களை தடுக்க அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோவை இந்தியா உருவாக்கும் என்றும் கூறினார்.

News September 10, 2024

இடஒதுக்கீடு ரத்து குறித்து யோசிப்போம்: ராகுல்

image

இந்திய தேசம் சமத்துவம் மிக்க நிலமாக மாறியதும், இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்கள்தொகையில் 90% உள்ள OBC, SC & ST மக்களுக்கு
உரிய பிரதிநிதித்துவம் இதுவரை அளிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், சமூக & பொருளாதார நிலையை அறிய சாதி – பொருளாதார ரீதியிலான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News September 10, 2024

₹6,717 கோடி: யூனுஸுக்கு கடிதம் எழுதிய அதானி

image

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்கு இந்தியத் தொழிலதிபர் அதானி கடிதம் எழுதியுள்ளார். அதில், அதானி பவர் நிறுவனத்திற்கு வங்கதேசத்தின் மின் வாரியத்திடம் ரூ. ₹6,717 கோடி நிலுவைத் தொகை உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு,
பாக்கியை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதானி நிறுவனம் ஜார்கண்டில் உள்ள ஆலையில் இருந்து வங்கதேசத்துக்கு மின்சாரம் வழங்குகிறது.

News September 10, 2024

போராடும் ஆசிரியர்களுடன் விரைவில் பேச்சு: அன்பில்

image

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பல நேரங்களில் நியாயமான கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் போராடியுள்ளதாகக் கூறினார். ஆசிரியர்கள் போராட்டத்துக்கு அரசு மதிப்பளிக்கிறது. அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும் என்றும் தெரிவித்தார்.

News September 10, 2024

அதிமுகவுடன் விசிக கூட்டணி சேருகிறதா?

image

சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் விசிக போட்டியிட்டது. எனினும், பல்வேறு விவகாரங்களில் திமுக மீது விசிக அதிருப்தியில் இருப்பதாகவும், <<14066181>>அதிமுகவுடன்<<>> கூட்டணி சேரக்கூடும் என்றும் தகவல் வெளியாகின. இதில் மவுனம் சாதித்த விசிக, மதுஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதால் 2 கட்சிகளும் கூட்டணி சேருமோ என அரசியல் ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

News September 10, 2024

Alert: பார்சல் ஸ்கேமில் சிக்காதீர்..!

image

பார்சல் ஸ்கேமில் இருந்து விழிப்புணர்வோடு இருக்கும்படி, மக்களுக்கு TN காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புது விதமான மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், பார்சல் டெலிவரி செய்வது போன்று சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய பார்சல்களுக்கு கட்டணத்தை செலுத்த வேண்டாம் எனவும், யாரிடமும் சொந்த தகவல்களை பகிர வேண்டாமென்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News September 10, 2024

மூலிகை: நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் ‘கொடுப்பை’

image

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் ஆற்றல் கொடுப்பைக்கு இருப்பதாக International Journal of Pharmacognosy & Phytochemical Research கூறுகிறது. லூபியோல், காம்பஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலைகளை காயவைத்துப் பொடித்து, தேனில் குழைத்து, வெறும் வயிற்றில் காலை வேளையில் 48 நாட்கள் உண்டுவந்தால், உடற்சூடு, ஆரம்பநிலை மூலம், வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் கட்டுப்படும்.

error: Content is protected !!