India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். வணிகர் நலனுக்கு தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியவர். அவரின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் வணிக பெருமக்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு, TATA நிறுவனம் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர் வெண்கலம் வென்றார். மேலும், தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரது வரலாற்று சாதனையை கவுரவிக்கும் வகையில், TATA நிறுவனம் சார்பில் CURVV EV SUV கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
IDBI வங்கி கிளைகளில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணி இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 56 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வி தகுதியாக MBA பட்டம் வாங்கி இருக்க வேண்டும். வயது வரம்பு 25-40 வரை ஆகும். மாத சம்பளம் ₹1.57 லட்சம் வரை வழங்கப்படும். வேலையில் சேர விரும்புவோர் IDBI வங்கி இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு செப் 15 கடைசி நாள். SHARE IT
8ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு JIO அறிவித்த ஆஃபர்கள் இன்றுடன் முடிகிறது. இதில் ₹899, ₹999, ₹3,599க்கு ரீசார்ஜ் செய்தால் ₹700 வரை சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக ₹2999க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 3 மாத ZOMATO கோல்டு மெம்பர்ஷிப் இலவசம். இதுதவிர ₹899 ரீசார்ஜ்-2 GB/d (90D). ₹999 ரீசார்ஜ்-2 GB/d, (98D). மேலும் ₹899, ₹999 ரீசார்ஜுக்கு 10 GB Free டேட்டா, 10 OTT தள Free சப்ஸ்கிரிப்ஷன்.
ஆப்பில் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரியஸ், புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழ் திரை பிரபலங்களான சித்தார்த் – அதிதி ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிதி, டிம் – குக்கிற்கு நன்றி எனவும், இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ₹500 கோடியை ஒதுக்கீடு செய்து, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில், நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை என எதிர்கட்சியினர் விமர்சித்தனர். இந்நிலையில், 22,061 சிறுபாசன ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தில், முதற்கட்டமாக 5,000 நீர்நிலைகள் புனரமைக்கப்படவுள்ளன.
ஒரு நாளில் 2-4 கப் கிரீன் டீ குடிப்பது உடலிற்கு அதிக நன்மை அளிக்கிறது. இது உடலில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக்கவும் கிரீன் டீ உதவுகிறது. மூளை ஆரோக்கியத்திலும் பங்காற்றுகிறது. புற்றுநோய் வருவதை தடுக்கும் திறன் பெற்றது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் செய்கிறது. கிரீன் டீயினை எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தற்போது ஆப்களில் அதிகம் கடன் வாங்கி வருகின்றனர் ஆனால் இது போன்ற ஆப்களை பற்றிய முன்னெச்சரிக்கை அவசியம் தேவைப்படுகிறது. அந்த ஆப்கள் RBI யில் பதிவு செய்திருக்கிறதா என விசாரிக்க வேண்டும். அந்த ஆப்களை 50ஆயிரம் மேல் பதிவிறக்க செய்திருந்தால் அதைப் பயன்படுத்தலாம். கடன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வாடிக்கையாளர் சேவை உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.1.22 லட்சம் பேரில் 85,000 ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிட்டனர். 37,500 (30%) ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அவர் ஊக்கத்தொகை வழங்கினார். இதில் பாராலிம்பிக்ஸில் சிறப்பாக ஆடி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். மேலும் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.