India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் செல்லும்போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருமுடி பைகளை 2025 ஜன. 20ஆம் தேதி வரை எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரம், எக்ஸ்ரே, இடிடி மூலம் இருமுடி தேங்காய் பைகள் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பக்தர்கள் எடுத்து செல்ல முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
➤ரஷ்யா மீது செர்பியா பொருளாதார தடைகளை விதிக்காது என்று அந்நாட்டு அதிபர் வூசிக் தெரிவித்தார். ➤பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ➤கமோரா போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லூய்கி கொலம்பியாவில் கைதானார். ➤ஜப்பானில் தொடர்ந்து 153ஆவது நாளாக வெயில் 25°C-ஐ தாண்டியது. ➤ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
நீரிழிவு நோய்க்கு மூலக்காரணமான ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆற்றலைக் கொண்ட பானமாக ஜப்பான் சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்டது கொய்யா இலை தேநீர். கொய்யா இலைகள், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் (சிட்டிகை) ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள்
கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கொய்யா இலை தேநீர் ரெடி. இந்த டீயை பருகுவதால் LDL கொலஸ்ட்ரால் அளவும் குறையும் எனக் கூறுகின்றனர்.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களும், இதய அறுவை சிகிச்சை செய்தவர்களும், இதய பிரச்னை உள்ளவர்களும் நட்ஸ் சாப்பிட வேண்டாமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கொழுப்பின் அளவு 300க்கு மேல் இருந்தால், அவர்கள் நட்ஸ் சாப்பிட வேண்டாம். மற்றவர்கள் காலை எழுந்தவுடன் நட்ஸை எடுத்துக் கொண்டால் உடலுக்கு புரதச்சத்து, நார்ச்சத்து கிடைப்பதோடு, செரிமானம் சுலபமாக இருக்கும் என்கிறார்கள்.
➤உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: U-23 மகளிர் ‘பிரீஸ்டைல்’ 53 Kg பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்லி, வெள்ளிப்பதக்கம் வென்றார். ➤உலக செஸ் தரவரிசையில் இந்திய வீரர் அர்ஜுன் 2802.1 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தைப் பிடித்தார். ➤ஜோகர் கோப்பை: இந்தியா, நியூசிலாந்து ஹாக்கி (U 21) அணிகள் மோதிய கடைசி லீக் போட்டி 3-3 என ‘டிரா’ ஆனது. ➤AUS டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான IND அணி அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் எண்ணெய் கிணறுகள் சிதறடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ரேஷன் கடைகள் நாளை (ஞாயிறு) திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி ஆகும். அதனை முன்னிட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை தங்குதடையின்றி மக்கள் வாங்க ரேஷன் கடைகள் நாளை திறந்திருக்கும் என்றும், அதற்கு பதிலாக நவம்பர் 16இல் அக்கடைகளுக்கு விடுமுறை நாள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
சனி பகவான் அருள் பெற சாதத்தில் சிறிதளவு தயிர் கலந்து பிசைந்து, கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைத்துவிட்டு சாப்பிடுவது சனி தோஷத்தை நீக்கும். அதேபோல், கருப்பு துணிக்குள் ஒரு ரூபாய் நாணயம் வைத்து, கல்லுப்பு போட்டு, கிழக்கு பார்த்து நின்று 7 முறை திருஷ்டி கழியுங்கள். இதை 21 சனிக்கிழமை செய்தால் துரதிர்ஷ்டங்கள், சனி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். SHARE IT
பெண்களின் ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய தோஷம் உள்ள பெண்கள், சனிக்கிழமை அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று விஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாக திகழும் கருடனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, மரிக்கொழுந்து மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, ஸ்ரீகருட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
நடிகர் சிம்பு ‘லப்பர் பந்து’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. இந்நிலையில், இப்படத்தை பார்த்த சிம்பு படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.