News September 11, 2024

மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை

image

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அவர் பேசுகையில், “இந்தியாவில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலானது சமவாய்ப்புகளுடன் நடத்தப்பட்டதல்ல. அதை சுதந்திரமாக நடைபெற்ற தேர்தலாக நான் கருதவில்லை. அப்படி சுதந்திரமாக நடந்திருந்தால் பாஜகவால் 240 தொகுதிகளுக்கு பக்கத்தில் கூட வந்திருக்க முடியாது” எனக் கூறினார்.

News September 11, 2024

இரவில் பல் துலக்காமல் இருந்தால் மாரடைப்பு வருமா?

image

இரவு நேரத்தில் பல் துலக்கிவிட்டு தூங்குவது மாரடைப்பை தடுக்கும் என மருத்துவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பலருக்கும் இதற்கு காரணம் தெரியாது. பற்களில் உருவாகும் சில கெட்ட வைரஸ்களும், பாக்டீரியாக்களும் ப்ளேக் (Plaque) எனப்படும் கொழுப்பு பசையை இதய வால்வுகளில் உருவாக்குகிறது. இதுதான் மாரடைப்புக்கு முக்கிய காரணம். இரவில் பல் துலக்குவதால் இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வது தடுக்கப்படும்.

News September 11, 2024

திமுகவின் B டீம் தான் விஜய் கட்சி: பாஜக

image

விக்ரவாண்டி தவெக மாநாட்டில்தான் தனது கட்சிக் கொள்கைகளை விஜய் வெளியிடவுள்ளார். அதற்கு முன்பாகவே அவரை பல கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், கிருஷ்ணர் ஜெயந்திக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் கூட வாழ்த்து கூற விஜய்க்கு தெரியவில்லை என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் விமர்சித்துள்ளார். மேலும், திமுகவின் B டீம் போல தவெக உருவெடுத்து வருவதாகவும் அவர் சாடினார்.

News September 11, 2024

உச்சி வெயிலில் கிணற்றை பார்க்கலாமா?

image

உச்சி வெயிலில் கிணற்றுக்குள் பார்க்காதே என நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். பிற்காலத்தில் கிணற்றில் பேய் இருக்கும் நம்மவர்கள் கதைக்கட்டி விட்டார்கள். உச்சி வெயிலில் கிணற்றுக்குள் சூரிய ஒளி நேரடியாக விழும். அப்படி விழுவதால் அதிக வெப்பம் காரணமாக, கிணற்றுக்குள் இருக்கும் விஷவாயு மேலே எழும்பும். இந்த சமயத்தில் கிணற்றில் எட்டிப் பார்த்தால் மயக்கம் அடைந்து அதற்குள் விழுந்துவிட வாய்ப்பு அதிகம்.

News September 11, 2024

இப்போதாவது கேட்டாரே திருமாவளவன்..!

image

விசிக சார்பில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் என்று திருமாவளவன் இப்போதாவது கேட்டாரே. 10 வருடமாக திமுக கூட்டணியில் விசிக உள்ளது. இப்போதாவது தமிழகத்தின் மிக மோசமான பிரச்னை மதுதான் என திருமாவளவன் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

News September 11, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: இல்வாழ்க்கை ▶குறள் எண்: 49 ▶குறள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். ▶பொருள்: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

News September 11, 2024

IAF பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?

image

இந்திய விமானப் படையில் உயர் பதவியை வகிக்கும் பெண் அதிகாரி ஒருவர், தனது சீனியர் விங் கமாண்டர் மீது காஷ்மீரில் உள்ள பட்காம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். விங் கமாண்டர் தன்னை 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் FIR பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என விமானப்படை தெரிவித்துள்ளது.

News September 11, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 11, 2024

ராசி பலன்கள் (11.09.2024)

image

*மேஷம் – நலத்துடன் இருப்பீர் *ரிஷபம் – பெருமையான நாளாக அமையும் *மிதுனம் – மறதி ஏற்படும் *கடகம் – புதிய நட்பு உருவாகும் *சிம்மம் – அமைதியான நாளாக அமையும் *கன்னி -சாந்தமாக இருங்கள் *துலாம் – கஷ்டமான நாளாக இருக்கும் *விருச்சிகம் – நன்மை உண்டாகும் *தனுசு – கோபம் ஏற்படும் *மகரம் – புகழ் உண்டாகும் *கும்பம் – சாதனை படைப்பீர் *மீனம் – இன்பமான நாளாக இருக்கும்.

News September 11, 2024

Troll செய்யப்படும் ஐபோன் 16 சீரிஸ்

image

ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஐபோன் 16 இதற்கு முந்தைய மாடலான 14,15 சீரிஸை போலவே இருப்பதாகவும், பின்னால் இருந்த 3 கேமராக்களில் ஒரு கேமராவை மட்டும் எடுத்துவிட்டு புதிய மாடல் என மாறுவேடத்தில் முகத்தில் மரு வைத்தது போல் உள்ளதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க.

error: Content is protected !!