News September 11, 2024

கெஜ்ரிவால் ஆட்சி கலைப்பா?

image

டெல்லி அரசை கலைக்கக் கோரி BJP எம்எல்ஏக்கள் அளித்த மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசு தலைவர் முர்மு அனுப்பி வைத்துள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால், அரசியலமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் டெல்லி அரசை டிஸ்மிஸ் செய்ய அம்மாநில BJP எம்எல்ஏக்கள் ஆக. 31இல் குடியரசு தலைவரிடம் மனு அளித்தனர். இதனை பரிசீலித்த, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்துறைக்கு முர்மு அனுப்பியுள்ளார்.

News September 11, 2024

துலீப் தொடரில் இருந்து கில் உள்ளிட்ட வீரர்கள் விடுவிப்பு

image

வங்கதேச தொடருக்கு தேர்வான IND வீரர்கள் துலீப் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், கில், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் உள்ளிட்ட வீரர்கள் BAN தொடருக்கு தேர்வாகியுள்ளனர். IND-BAN இடையே முதல் டெஸ்ட் சென்னையில் வரும் 19இல் நடைபெறுகிறது. கில் இந்திய A அணிக்கு கேப்டனாக உள்ளதால், அவருக்கு பதிலாக மயங்க் அகல்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 11, 2024

அமெரிக்காவை உலுக்கிய செப்.11 தாக்குதல்

image

2001 செப். 11இல் நிகழ்ந்த இரட்டை கோபுர தாக்குதல் உலகையே உலுக்கிய அசம்பாவிதமாகும். USA மீதான உலகின் பார்வையை இது முற்றிலுமாக மாற்றி அமைத்தது. உலகின் ஒரே சூப்பர் பவர் நாடு என்று கூறிவந்த USA மீது அல்கொய்தா நடத்திய இந்த தாக்குதல், தீவிரவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு வெளிக்காட்டியது. இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இதன் 23ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

News September 11, 2024

அதிருப்தியாளர்களுக்கு பதவி: இபிஎஸ் முடிவு?

image

விஜய்யின் தவெக கட்சியில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் உள்ள அதிருப்தி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் விரைவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதை கவனித்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், அதிருப்தி நிர்வாகிகள் யாரும் தவெக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், அவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 11, 2024

APPLY: தெற்கு ரயில்வேயில் வேலை

image

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. லெவல் 1 முதல் லெவல் 5 வரையிலான பதவிகளில் காலியாகவுள்ள 67 இடங்கள் நிரப்பப்படுகின்றன. மாத சம்பளம் ₹18,000 முதல் ₹29,200 வரை ஆகும். வேலைக்கு www.rrcmas.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள் அக்டோபர் 6ம் தேதி ஆகும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். SHARE IT

News September 11, 2024

கடும் சரிவில் கச்சா எண்ணெய் விலை

image

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை $70க்கு கீழ் சரிந்தது. பேரல் கச்சா எண்ணெய் விலை $2.33 சரிந்து, $69.51க்கு விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெயின் தேவை கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 2.11 மில்லியன் பேரலாக இருந்த நிலையில், தற்போது 2.03 மில்லியன் பேரலாக குறைந்துள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டுக்கான தேவை 1.74 மில்லியன் பேரலாக குறையும் என OPEC கணித்துள்ளது.

News September 11, 2024

யார் இந்த விக்டோரியா கெளரி?

image

குமரியில் பிறந்து 20 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய <<14072610>>விக்டோரியா கெளரி<<>>, மதுரை ஐகோர்டில் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர். பாஜக உறுப்பினராக இருந்த இவர், தேசிய மகளிர் அணி செயலாளராகவும் இருந்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய இவரை, சென்னை HC நீதிபதியாக பரிந்துரைக்க 21 மூத்த வழக்கறிஞர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2024

45ஆவது செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம்

image

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணிக்கான ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோரும், மகளிர் பிரிவில் ஹரிகா, வைஷாலி உள்ளிட்டோரும் களம் இறங்குகின்றனர். சென்னையில் நடந்த கடந்த ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இம்முறையும் நமது வீரர்கள் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.

News September 11, 2024

பொங்கல்: ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

image

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பு தொடங்கிவிடும். அதன்படி பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கவுள்ளது. ஜனவரி 10ம் தேதி பயணிப்போர் நாளையும், ஜனவரி 11க்கு பயணிப்போர் நாளை மறுநாளும், ஜனவரி 12க்கு வருகிற 14ம் தேதியும், ஜனவரி 13க்கு வரும் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

News September 11, 2024

ஃபோர்டு அதிகாரிகளுடன் CM பேச்சுவார்த்தை

image

USAவில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், TNஇல் அந்நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்பு குறித்து ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்ததாகவும், 30 ஆண்டுகால உறவை புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!