News September 11, 2024

அதிகார மமதையில் திமுக: இபிஎஸ்

image

அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி நலத்திட்ட பணியை தொடங்கி வைக்க திமுகவினர் அனுமதிக்காததற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற அதிகார மமதையில் திமுக அரசு செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, கே.பி.முனுசாமி தனது தொகுதியில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க சென்ற நிலையில், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

News September 11, 2024

கைதிக்கு ரூ.420 கோடி நஷ்டஈடு

image

சிகாகோவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 10 வருட சிறைக்குப் பின் 2018இல் விடுதலையான மார்செல் பிரவுன் என்பவருக்கு ஃபெடரல் நீதிமன்றம் $50 மில்லியன் டாலர் (ரூ.419.7 கோடி) நஷ்டஈடு வழங்கியுள்ளது. 2008இல் பாரிஸ் ஜாக்சன் என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவுனுக்கு 35 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 10 வருட தண்டனைக்கு பின் மேல்முறையீடு செய்ததில், அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

News September 11, 2024

இந்தியர்களுக்கான சிறந்த நாடுகள்

image

டிஜிட்டல் பயண தளமான அகோடாவின் தங்குமிட தேடல் தரவுகளின் அடிப்படையில் தாய்லாந்து, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத சிறந்த நாடாக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து மலேசியா 2023இல் 8ஆவது இடத்திலிருந்து 2024 முதல் பாதியில் 4ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் இலங்கை, நேபாள் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. உங்களுக்குப் பிடித்த நாடு எது? கமெண்ட் பண்ணுங்க.

News September 11, 2024

9 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை

image

மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

News September 11, 2024

சொத்துகளை அபகரிக்க அரசே துணை போகக் கூடாது: பாமக

image

வில்லங்க சொத்துகளை அபகரிக்கும் செயலுக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொத்துகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அதனைப் பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டிருப்பது ஆபத்தானது எனவும் அவர் சாடியுள்ளார்.

News September 11, 2024

GST வரம்பிற்குள் பெட்ரோல், டீசல்.. ஐகோர்ட்டில் மனு

image

GST சட்ட வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், GST சட்ட வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

News September 11, 2024

திமுகவுக்கு எதிராக ADMK எம்எல்ஏக்கள் சாலை மறியல்

image

சாலை பணி திட்டத்தை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அதிமுக எம்எல்ஏ கே.பி முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் பூமி பூஜை போடுவதற்கு ஏன் அனுமதி இல்லை? என்று கேள்வி எழுப்பிய அவர், தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்டு வருகிறார். அம்மாவட்டத்தை சேர்ந்த இதர அதிமுக எம்எல்ஏக்களும் அங்கு வந்ததால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News September 11, 2024

200 ஊழியர்களுக்கு ஷாக் கொடுக்கும் சாம்சங்

image

சாம்சங் இந்தியா நிறுவனம் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 10% பேர் வேலையை இழப்பார்கள். இதனிடையே சுங்குவார்சத்திரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2024

பிரபல இந்தி நடிகையின் தந்தை தற்கொலை

image

பிரபல இந்தி நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தியில் ஹவுஸ்புல், கப்பார் சிங், தபாங் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் மலைகா அரோரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2024

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

image

இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் அஞ்சலி செலுத்தினர். அதே போல காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனையொட்டி பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!