News September 12, 2024

ஃப்ரிட்ஜை சரியாக பராமரிக்கிறீர்களா?

image

வீட்டுக்கு வீடு ஃப்ரிட்ஜ் வந்துவிட்டது. அதில் காய்கறி, பழங்களை வைத்து பாதுகாக்கும் மக்கள், அதை சரியாக பராமரிக்கிறார்களா? என்றால் கேள்விக்குறிதான். அதனை சுத்தம் செய்வதோடு, வயரிங்கை சோதித்து, ஸ்டெப்லைசர் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், மதுரையில் இன்று ஃப்ரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் பலியாகியுள்ளனர். எனவே அவற்றை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பராமரிப்பதும் அவசியமாகும்.

News September 12, 2024

₹11,637 கோடி வருவாய் ஈட்டிய இந்தியா

image

கடந்தாண்டு நடந்த 13ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் மூலம் இந்தியப் பொருளாதாரம் பெரும் பலன் அடைந்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது. மிகப்பெரிய விளையாட்டு திருவிழா என வர்ணிக்கப்பட்ட இப்போட்டி, இந்தியாவுக்கு ₹11,637 கோடி வருவாய் பங்களிப்பை அளித்துள்ளது. இந்த போட்டியையொட்டி, இந்தியாவில் 48,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், முதன்மையான சுற்றுலாத் தலமாக நாடு மாறியிருப்பதாகவும் ICC கூறியுள்ளது.

News September 12, 2024

திமுக கூட்டணி பலவீனம் அடைகிறதா? விசிக பதில்

image

திமுக கூட்டணியை விசிக பலவீனம் ஆக்கவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக தலைமையில் கூட்டணி இருந்தாலும், தமிழக அரசு திமுக அரசுதான் என்றும் அவர் கூறினார். அரசு நடத்தும்போது சில சமரசம் செய்தாக வேண்டும். ஆனால் அந்த சமரசம் கருத்தியல் சமரசம் ஆகிவிட கூடாது என்றே விசிக எச்சரிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து உங்கள் கமெண்டை பதிவிடுங்க.

News September 12, 2024

Motor News: 15 லட்சம் கார்களை திரும்பப் பெறும் BMW

image

கார் பிரேக்குகளில் உள்ள கோளாறு காரணமாக 15.3 லட்சம் கார்களை திரும்பப் பெறப்போவதாக BMW நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள BMW X மாடல்களான X5 & X7 சீரிஸ், மினி கூப்பர் உள்ளிட்ட 12 லட்சம் கார்கள் வாடிக்கையாளரிடமும், 3.2 லட்சம் கார்கள் டீலர்களிடமும் உள்ளன. BMW நிறுவனத்தின் இந்த முடிவால் நிதியாண்டின் 2ஆம் பாதியில் அதன் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

News September 12, 2024

திமுகதான் எங்கள் எதிரி : பாஜக

image

திமுகத்தான் தங்களது எதிரி என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிப்பதாகவும், ஆனால் தன் எதிரி யார் என்று தெரியாமல் அதிமுக குழம்பி நிற்பதாகவும் அவர் கூறினார். அதிமுகவோடு கூட்டணி என்பதில் பாஜகவில் இருவேறு கருத்துக்கள் உள்ளதாகவும், அதிமுக நிர்வாகிகள் கூட பாஜக கூட்டணியை விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

News September 12, 2024

விஜய்யின் வெற்றி மக்கள் கையில்: RB உதயகுமார்

image

தவெக தலைவர் விஜய்யின் வெற்றி மக்கள் கையில் இருப்பதாக அதிமுக EX மினிஸ்டர் RB உதயகுமார் தெரிவித்துள்ளார். விஜய்யை பாராட்டியது குறித்தும், MR விஜயபாஸ்கர் விமர்சித்தது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய் கட்சியை பொறுத்தவரை அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்து EPS தெரிவிப்பதுதான் என்று கூறினார். விஜய்க்கு கட்சி தொடங்க மட்டுமின்றி, மாநாடு நடத்தவும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.

News September 12, 2024

இந்திய கடற்படையில் வேலை.. உடனே விண்ணப்பிங்க..

image

இந்திய கடற்படையில் SSR (Medical Asst.) வேலைக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி காலத்தில் மாதம் ₹14,600ம், பிறகு பதவி உயர்வுடன் படிப்படியாக சம்பளம் உயர்த்தப்பட்டு மாதம் ₹1.51 லட்சம் வரை வழங்கப்படும். ₹75 லட்சம் காப்பீடும் உண்டு. வேலைக்கு www.joinindiannavy.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 17ம் தேதி கடைசி நாள் ஆகும். SHARE IT

News September 12, 2024

வங்கிகளில் உள்ள சேமிப்பு பணத்துக்கும் இனி வரி?

image

வங்கிகளில் உள்ள டெபாசிட் பணத்துக்கும் இனி வரி விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2 மேல்முறையீடு வழக்குகளில் மும்பையில் உள்ள வருமான வரித் தீர்ப்பாயம், IT சட்டத்தின் 68, 69ஏ பிரிவுகளை சுட்டிக்காட்டி வரி விதிக்கலாம் எனத் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில், இனி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு, போதிய விளக்கம் அளிக்கவில்லையேல் அத்தொகைக்கு வரி விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News September 12, 2024

விளையாட்டு துளிகள்

image

*WC கால்பந்து தென் அமெரிக்க தகுதி சுற்றில் அர்ஜென்டினாவை கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. *வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ்-தனிஷா ஜோடி வென்றது. *தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் முதல் நாளில் இந்தியா 3 தங்கம் உள்ளிட்ட 9 பதக்கங்களை கைப்பற்றியது. *பாரிஸில் போதைப்பொருள் வாங்க முயற்சித்த ஹாக்கி வீரர் கிரெய்க், 12 மாதம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

News September 12, 2024

குரு பகவானின் அருளை பெற இதை செய்யுங்கள்!

image

தேவர்களுக்கெல்லாம் ஆசானாக விளங்கக் கூடிய குரு பகவானை வணங்க கூடிய கிழமை வியாழக்கிழமை. சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளான அவருக்கு 16 வியாழக்கிழமை விரதமிருந்து கோயிலுக்குச் சென்று, அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம் & வெண்முல்லை மலர் சாற்றி, வடகிழக்கு திசை நோக்கி தீபமேற்றி, கடலை அன்னம் படைத்து, குரு காயத்ரி மந்திரங்கள் சொல்லி வணங்கினால், குரு கிரகத் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!