India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிர்பாராமல் நடைபெறும் சம்பவங்கள் சிலரின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோல கடந்த மாதம் வயநாடு நிலச்சரிவில் தந்தை, தாய், சகோதரி, 6 குடும்ப உறுப்பினர்களை இழந்து நிர்கதியாக ஸ்ருதி தவித்தார். அவருக்கு ஆம்னி வேன் டிரைவரான காதலர் ஜான்சனே உதவி செய்தார். ஆனால், ஆம்னி வேன் மீது பஸ் மோதிய விபத்தில் தற்போது அவரும் பலியாகியுள்ளார். இதனால் ஸ்ருதியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கப நோய்களை நீக்குவது முதல், வீரிய விருத்தியை உண்டாக்குவது வரை தூதுவளை மூலிகைக்கு சகல வல்லமை உள்ளதென அகத்தியர் குணவாகடம் கூறுகிறது. சைடோஸ்டீரால், சொலசோடின், சாபோனின்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலை உலர்த்திய பொடியுடன் சிறிது மிளகுத் தூள் & தேன் சேர்த்துக் கொடுக்க சளி, இருமல் மட்டுமன்றி வயிற்று உப்புசமும் குறையும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மத்தியஅரசு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் GNSS முறையை அமல்படுத்தவுள்ளது. பாஸ்டேக் முறை தற்போது அமலில் இருப்பினும் விடுமுறை காலங்களில் வாகனங்கள் சுங்கசாவடிகளில் தேங்கி நிற்கின்றன. இதை தடுக்க செயற்கைகோள் மூலம் குளோபல் நேவிகேஷன் சாட்லைட் சிஸ்டம் என்ற பயண தூர அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும். இது நாடு முழுவதும் ஒரு சில NHகளிலும் விரைவுச்சாலைகளிலும் செப் 10 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக MI அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என தகவல் பரவி வருகிறது. ரோஹித் MI-ஐ விட்டு மாறுவது உறுதி என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஏலத்திற்குள் கொண்டு வராமலேயே LSG அணியின் நிர்வாகம் அவரை வாங்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்களா?
விஜய்யின் தவெக கட்சி மாநாடு அக்டோபர் மாதம் 15ம் தேதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் விரைவில் கடிதம் அளிக்கப்பட இருப்பதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது. முன்னதாக, விஜய் கட்சி மாநாட்டை இந்த மாதம் 23ம் தேதி நடத்த அனுமதிகாோி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல நிபந்தனைகளுடன் காவல்துறை அண்மையில் அனுமதி வழங்கியது.
ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க இன்னும் 2 நாள்களே அவகாசம் உள்ளது. அத்தகவல்களை 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பது கட்டாயமாகும். அந்தத் தகவலை இலவசமாக செப்.14 வரை புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டு இருந்தது. இச்சலுகை நிறைவடைய இன்னும் 2 நாள்களே உள்ளன. அதனை புதுப்பிக்காதோர் உடனடியாக இச்சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்பிறகு ₹50 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் OS 12, 12 L, 13, 14 பயன்படுத்துவோருக்கு மத்திய தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி தாெழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசரகால பதில் குழு இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அந்தப் போன்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகலாம், தகவல்கள் திருடப்படலாம். ஆதலால், உடனே பாதுகாப்பு அப்டேட்ஸ் செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.
மகாவிஷ்ணு விவகாரம் எதிரொலியாக, பள்ளிகளில் வெளிநபர்கள் நுழைய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகங்களில் உள்ள அங்காடிகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
1) மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 2) எந்த பொருள் நீரில் கரையாது? 3) கிரைசோகிராப் கருவியை யார் கண்டுபிடித்தது? 4) சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் ? 5) உலகின் மிகப்பெரிய பறவை எது? 6) வைட்டமின் K குறைப்பாடு என்ன பாதிப்பை ஏற்படுகிறது? 7) மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி – வடிவேலு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு ‘கேங்கர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. வடிவேலுவின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது. கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் இப்படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.