India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விமான நிலைய பணியாளர்கள், மனித உரிமை அமைப்புகள், வேலைவாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஹாஸ்பிடலில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அவர் 5 ஆண்டு சிறையில் இருந்தநிலையில் கடந்த மாதம் 6ம் தேதிதான் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தனி கேபினில் உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இது குடும்பக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட கூறப்படுகிறது. முன்னதாக இருவரும் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2 நாள்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை மண்டல வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டில் சீலிங் பேனில் 6 அடி நீள கோதுமை நாகப் பாம்பு படமெடுத்து ஆடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் சின்னூரைச் சேர்ந்த சிலர் தோட்ட வேலை செய்து வருகின்றனர். அந்த வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தேடியபோது சீலிங் பேனில் அது படமெடுத்து ஆடியது. பாம்பு பிடி வீரர் கண்ணன் அதனைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
ஒரு முறைக்கும் மேல் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் அதிக பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகிறது. இந்த பாக்டீரியாவின் அளவு கழிப்பறை இருக்கையின் மேற்பரப்பில் காணப்படும் பாக்டீரியாக்களின் அளவைவிட 40,000 மடங்கு அதிகம். ஒவ்வொரு மிலி நீரிலும் 75,000 பாக்டீரியாக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை 24 மணிநேரத்தில் 2 மில்லியன் வரை பெருகும். எனவே தண்ணீர் பாட்டில் சுத்தத்தில் அதிக கவனம் வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை 12,600 ஆக அதிகரித்துள்ளது. ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு அறிகுறி இருப்போர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தனிப்பெரும் கலைஞன் வடிவேலுவுக்கு இன்று பிறந்தநாள். கைப்புள்ள, வண்டுமுருகன், வீரபாகு, நேசமணி, என தனது திரைப்பட கதாபாத்திரங்கள் வழியே தமிழ்ச் சமூகத்தின் அங்கமாகவே மாறிவிட்டவர். சிரிக்க வைக்கும் கலைஞனால் எளிதாக அழ வைக்கவும் முடியும் என நிரூபித்த சார்லி சாப்ளின் வழியில் கலையுலகில் பயணித்த அவர் நடித்து உங்களுக்குப் பிடித்த படத்தைக் கமெண்ட்டில் சொல்லுங்க!
ஆதார் தகவலை இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 14ம் தேதி வரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவகாசம் அளித்துள்ளது. இந்த அவகாசம் இந்த மாதம் 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். அதன்பிறகு புதுப்பிக்க ₹50 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வெளியிடவுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை எதிர்த்தும், தனக்கு ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்ததையடுத்து நாளை தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.